‘ஹாட்ரிக்’ உள்பட 5 நோ-பால்களை வீசிய அர்ஷ்தீப்; கடுப்பில் ரசிகர்கள்!

Updated: Thu, Jan 05 2023 22:06 IST
Image Source: Google

ஒரு நாள் ,டி20 என அனைத்து கிரிக்கெட் போட்டிகளிலும் நோ பால் வீசுவது என்பது தற்போது பெரும் குற்றமாக மாறிவிட்டது. அதுவும் டி20 கிரிக்கெட்டில் ஒரு நோ பால் வீசினால் அவ்வளவுதான் அடுத்து கிடைக்கும் ப்ரி ஹிட்டை வைத்து பேட்ஸ்மேன்கள் ஆதிக்கம் செலுத்த தொடங்கி விடுவார்கள்.

இப்படி இருக்க ஒரே ஆட்டத்தில் ஐந்து நோபல் வீசினால் என்ன ஆகும். அதுதான் இந்தியா இலங்கை அணிகள் மோதிய இரண்டாவது டி20 போட்டியில் நடந்தது. புனேவில் நடைபெறும் டி20 போட்டியில் சேசிங் செய்யும் அணி அவ்வளவாக வென்றதில்லை என்பது வரலாறு. ஆனால் நமது ஹர்திக் பாண்டியா தலைகீழாக தான் குதிப்பேன் என்று கூறி டாஸ் வென்று சேஸிங் தேர்வு செய்தார். மேலும் ஹர்சல் பட்டேலை நீக்கி விட்டு காயத்தில் இருந்த மீண்டு வந்த ஆர்ஸ்தீப் சிங்கிற்கு வாய்ப்பு வழங்கினார்.

பொதுவாக வீரர்கள் மேட்ச் பிராக்டிஸ் இல்லை என்றால் அவர்கள் ஆட்டத்தில் விளையாடுவது மிகவும் கடினம். அதுவும் இந்திய கிரிக்கெட் அணியில் அதிக முறை நோபல் வீசியவர் என்ற பெருமையை பெற்றிருக்கிறார் ஆர்ஸ்தீப் சிங். இந்த போட்டிற்கு முன் ஆர்ஸ்தீப் சிங் 9 முறை நோ பால் பேசி இருக்கிறார். இன்றைய ஆட்டத்தில் அவர் வீசிய முதல் ஓவரில் மட்டும் 3 நோ பாலை வீசி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார்.

இதன்மூலம் முதல் ஓவரிலே ஆர்ஸ்தீப் சிங் நோ பால் மூலம் கூடுதலாக 13 ரன்கள் விட்டுக் கொடுத்தார். இதனால் ஹர்திக் பாண்டியா மீண்டும் நீண்ட நேரமாக ஓவர் கொடுக்கவில்லை. இதை அடுத்து 19ஆவது ஓவரில் ஆர்ஸ்தீப் சிங்கிற்கு மீண்டும் ஓவர் வழங்கப்பட்டது. அதிலும், ஆர்ஸ்தீப் சிங் இரண்டு நோ பால்களை வீசினார். இதேபோன்று உம்ரான் மாலிக் வீசிய ஒரு நோபல் சிக்சருக்கு சென்றது .

சிவம் மவியையும் ஒரு நோபல் வீசி ரன்களை வாரி கொடுத்தார். இந்த ஆட்டத்தில் இந்திய அணி 7 நோ பால்களை வீசி இலங்கைக்கு பரிசாக கொடுத்தது. குறிப்பாக இதுவரை 9 நோ பால் வீசிய ஆர்ஸ்திப் சிங் இந்த ஒரு ஆட்டத்தில் மட்டும் ஐந்து நோ பால் வீசி புதிய சாதனை படைத்திருக்கிறார். வித்தியாசமாக செயல்படுகிறேன் என்று கூறி நன்றாக விளையாடிய ஹர்சல் பட்டேல் நீக்கிவிட்டு ஆர்ஸ்தீப் சிங்கிற்கு ஹர்திக் வாய்ப்பு கொடுத்தது தவறாக பார்க்கப்படுகிறது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை