'எனது பிளானில் சாம்சன் சிக்கிக்கொண்டார்' - அர்ஷ்தீப் சிங்
நேற்றைய ஐபிஎல் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் 6 விக்கெட்டிற்கு 221 ரன்கள் எடுத்தது. இதையடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 217 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாமசன் 119 ரன்கள் அடித்து ஒற்றை ஆளாக போராடியும் அந்த அணியால் வெற்றி பெற முடியவில்லை.
இந்நிலையில் கடைசி பந்தில் சஞ்சு சாம்சனை அட்டாக்கியது குறிர்த்து பேசிய அர்ஷ்தீப், சாம்சன் களத்தில் நின்று அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். எனவே அவருக்கு வைட் லைன் யார்க்கர் பந்துகளை மட்டுமே வீச நினைத்தேன். ஏனென்றால் அந்த பந்தை தூக்கி அடிப்பது மிக கடினம். நான் நினைத்தது போலவே சாம்சன் சிக்சர் அடிக்க முயற்சித்து ஆட்டமிழந்தார்.
அதேசமயம் ஐபிஎல் தொடர் மிகப்பெரிய ஒன்றாகும். இங்கு எந்த அணியின் ஆட்டத்தையும் நிர்ணயிக்க முடியாது. நான் நேற்றைய போட்டிக்காக எதையும் தயார்படுத்திக்கொள்ளவில்லை. நான் வழக்கம்போல் எப்படி பந்துவீச வேண்டுமோ அதனை மட்டுமே செய்தேன் என்று தெரிவித்துள்ளார்.