நாங்கள் இத்தொடரில் முழுமையான ஆதிக்கத்தை செலுத்துவோம் - டிம் பெயின்!

Updated: Wed, Jun 28 2023 13:24 IST
Ashes 2023: Australia's Depth And Ability To Play In Any Situation Gives Them Advantage Over England (Image Source: Google)

இங்கிலாந்து  - ஆஸ்திரேலியா இடையிலான 5 போட்டிகளைக் கொண்ட ஆஷஸ் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி முடிந்துள்ள நிலையில் இன்று 2ஆவது டெஸ்ட் போட்டி தொடங்கவுள்ளது. முதல் டெஸ்டில் இங்கிலாந்து அணி தோல்வியடைந்த சூழலில், இந்த போட்டியில் வெற்றி பெற்று ஆஸ்திரேலிய அணிக்கு பதிலடி கொடுக்குமா என்ற எதிர்பார்ப்பில் இங்கிலாந்து ரசிகர்கள் உள்ளனர்.

அதேசமயம் ஆஸ்திரேலிய அணி முதல் போட்டியில் வெற்றிபெற்ற உத்வேகத்துடன் இப்போட்டியை எதிர்கொள்கிறது. இரு அணிகளிலும் தரமான பேட்டர்கள், பந்துவீச்சாளர்கள் உள்ளதால் இத்தொடரின் மீதான எதிர்பார்ப்புகளும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. 

இந்நிலையில் இத்தொடர் குறித்து பேசியுள்ள ஆஸி அணியின் முன்னாள் கேப்டன் டிம் பெயின், “எங்களிடம் பல நல்ல வீரர்கள் உள்ளனர். பேட்டிங்கில் எந்த சூழ்நிலையிலும் எந்த நிலையிலும் எந்த டெம்போவிலும் விளையாடும் திறன் கொண்ட வீரர்கள் இருப்பது நன்மை என்று நான் நினைக்கிறேன். இப்போட்டியில் இங்கிலாந்து எப்படி விளையாடப் போகிறது என்பது எங்களுக்குத் தெரியும்.

அவர்கள் மிகவும் கடினமாக வரப் போகிறார்கள், அது அவர்களை மிகவும் கணிக்கக்கூடியதாக மாற்றியுள்ளது. அவர்கள் எப்படி விளையாடப் போகிறார்கள் என்பது எங்களுக்குத் தெரியும் என்பதால் அதற்கான வியூகங்களையும் எங்களது வீரர்கள் அமைத்திருப்பார்கள். அதனால் நாங்கள் இத்தொடரில் முழுமையான ஆதிக்கத்தை செலுத்துவோம் என்று நான் நினைக்கிறேன்.

அவர்கள் கடினமான மற்றும் தட்டையான விக்கெட்டுகளை விரும்புவதாகத் தொடருக்கு முந்தையதைக் கேள்விப்பட்டோம். முதல் டெஸ்டில் அவர்கள் அதைப் பெற்றனர். இருந்தாலும் அது அவர்களுக்கு சரியாக அமையவில்லை. இன்றைய ஆடுகளத்தைப் பார்த்தால், முழுமையான பச்சை நிறமாக இருப்பதால் இது சுவாரஸ்யமாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன். 

அவர்கள் வெளிப்படையாக ஸ்டூவர்ட் பிராட் மற்றும் ஜிம்மி ஆண்டர்சனை மீண்டும் டெஸ்ட் போட்டிக்கு கொண்டு வர முயற்சிக்கின்றனர். ஆனால் கேப்டன் ஸ்டோக்ஸ் மற்றும் பயிற்சியாளர் பிராண்டன் மெக்கலம் ஆகியோரது திட்டங்கள் எங்களிடம் பலிக்கவில்லை. அவர்கள் விளையாட முயற்சிக்கும் பிராண்ட் சிறந்தது, பார்க்க நன்றாக இருக்கிறது. ஆனால் சில நேரங்களில் அவர்களின் முடிவுகள் தவறாக முடிந்ததை நம்மால் பார்க்க முடிந்தது” என்று தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை