ஸ்டார்க்கின் அபார கேட்ச்; நாட் அவுட் கொடுத்த நடுவர்- வைரல் காணொளி!

Updated: Sun, Jul 02 2023 11:24 IST
Image Source: Google

உலகப் புகழ் பெற்ற ஆஷஸ் டெஸ்ட் தொடர் இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே இந்த முறை இங்கிலாந்தில் நடந்து வருகிறது. இந்த தொடரில் முதல் போட்டியில் பரபரப்பான ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்று இருக்க, தற்பொழுது இரண்டாவது நாள் ஆட்டம் மிகவும் பரபரப்பான கட்டத்தை ஐந்தாவது நாளில் எட்டி இருக்கிறது.

ஆட்டத்தின் ஐந்தாவது நாளான இன்று இங்கிலாந்து கைவசம் ஆறு விக்கெட்டுகள் இருக்க 257 ரன்கள் வெற்றிக்கு தேவைப்படுகிறது. இங்கிலாந்தில் கடைசியாக நடந்த ஆஷஸ் தொடரில் இப்படியான ஒரு ஆட்டத்தில் பென் ஸ்டோக்ஸ் நின்று வென்று கொடுத்திருந்தார். இப்பொழுது அவர் களத்தில் இருப்பதால் அந்த எதிர்பார்ப்பு இங்கிலாந்து ரசிகர்களுக்கு இருக்கிறது.

ஆனால் நேற்று இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்துக்கு மிட்சல் ஸ்டார்க் இரண்டு விக்கெட்டுகளை தூக்கி அதிர்ச்சி அளித்தார். இதற்கு அடுத்து ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் கம்மின்ஸ் ஒரே ஓவரில் ஜோரூட் மற்றும் ஹாரி புரூக் இருவரது விக்கெட்டையும் வீழ்த்தி ஆட்டத்தை ஆஸ்திரேலியா பக்கமே கொண்டு வந்து விட்டார்.

இந்த நிலையில் பொறுப்பாக விளையாடி அரைசதம் அடித்த பென் டக்கட் கேமரூன் கிரீன் பந்தை பைன் லெக் திசையில் தூக்கி அடிக்க, அங்கு நின்று இருந்த ஸ்டார்க் அதை அபாரமாக கேட்ச் பிடித்தார். பென் டக்கட் மைதானத்தை விட்டு வெளியேற நடக்க ஆரம்பித்து விட்டார். ஆனால் கேட்ச்சை சரிபார்த்த நடுவர்கள் அது அவுட் இல்லை என்று அவரை திரும்ப களத்திற்கு வர கூறிவிட்டார்கள். 

ரீப்ளையில் பார்க்கும் பொழுது பந்தை ஸ்டார்க் தரையில் ஊன்றி விட்டதாக தெளிவாகத் தெரியும். இதனால் அவுட் இல்லை என்று கூறப்பட்டதாக சொல்லப்பட்டது. இங்கு என்ன பிரச்சனை என்றால் இதேதான் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஷுப்மன் கில்லுக்கும் நடந்தது. ஆனால் நடுவர்கள் அவுட் வந்து விட்டார்கள். இங்கு அவுட் தரவில்லை. 

 

இதற்குக் காரணம் பந்தின் அடிப்பகுதியில் விரல்கள் இருந்து பந்து தரையில் மோதுவது பிரச்சனை இல்லை என்று சொல்லப்படுகிறது. ஸ்டார்க் கைவிரல்கள் பந்துக்கு மேல்தான் இருந்தது அடியில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இக்காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை