பாக்ஸிங் டே டெஸ்ட்: உலக சாதனைப் படைத்த ஜோ ரூட்!
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி மெல்போர்னில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 185 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதன்பின் முதல் இன்னிங்ஸில் விளையாடிவரும் ஆஸ்திரேலிய அணி அணி முதல் நாள் ஆட்டத்தில் ஒரு விக்கெட்டை இழந்து 61 ரன்களைச் சேர்த்துள்ளது.
இந்நிலையில் இப்போட்டியில் இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் அரைசதம் கடந்ததுடன், உலக சாதனை ஒன்றையும் படைத்துள்ளது.
அதாவது ஒரே ஆண்டில் அதிக டெஸ்ட் ரன்களை குவித்த கேப்டன் என்பதுதான். முன்னதாக தென் ஆப்பிரிக்க கேப்டன் கிரேம் ஸ்மித் 1,656 ரன்களை அடித்து முதலிடத்தில் இருந்தார்.
அதனைத் தற்போது ஜோ ரூட் 1,680 ரன்களைச் சேர்த்து, ஒரே ஆண்டில் அதிக டெஸ்ட் ரன்களை விளாசிய கேப்டன் எனும் புதிய சாதனையைப் படித்துள்ளார்.
மேலும் ஒரே ஆண்டில் அதிக டெஸ்ட் ரன்களைக் குவித்த வீரர்கள் பட்டியலிலும் ஜோ ரூட் 3ஆம் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.