சச்சின், கவாஸ்கரை பின்னுக்குத் தள்ளிய  ஜோ ரூட்!

Updated: Sat, Dec 18 2021 15:06 IST
Image Source: Google

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான பகலிரவு டெஸ்ட் போட்டி அடிலெய்டில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 473 ரன்களைச் சேர்த்து டிக்ளர் செய்தது. அதன்பின் முதல் இன்னிங்ஸில் விளையாடிவரும் இங்கிலாந்து அணி மூன்றாம் நாள் ஆட்டத்தில் தடுமாறி வருகிறது. 

இந்நிலையில் இப்போட்டியில் இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் அரைசதம் கடந்ததுடன், சச்சின், சுனில் கவாஸ்கர் ஆகியோரின் சாதனையையும் முறியடித்துள்ளது.

அச்சாதனையானது ஒரே ஆண்டில் அதிக டெஸ்ட் ரன்களைக் குவித்த வீரர் என்பது தான். அந்தவரிசையில் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் 1600 ரன்களைக் குவித்து, ஒரே ஆண்டில் அதிக டெஸ்ட் ரன்களை குவித்த 4ஆவது வீரர் எனும் பெருமையைப் பெற்றுள்ளார்.. இதில் 6 சதங்களும் அடங்கும். 

இப்பட்டியலில் பாகிஸ்தானின் முகமது யூசுப் 1788 ரன்கலுடன் முதலிடத்திலு, வெஸ்ட் இண்டீஸின் விவி ரிச்சர்ட்ஸ் 1710 ரன்களுடன் இரண்டாம் இடத்திலும், கிரேம் ஸ்மித் 1656 ரன்களுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளனர். 

இப்பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் 1562 ரன்களுடன் 6ஆவது இடத்திலும், சுனில் கவாஸ்கர் 1555 ரன்களுடன் ஏழாவது இடத்திற்கும் தள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

மேலும் இந்த ஆண்டில் ஜோ ரூட் இன்னும் 3 இன்னிங்ஸில் விளையாடினால், முகம்து யூசுப்பின் சாதனையையும் முறியடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை