எல்எல்சி 2022: ஆஷ்லி நர்ஸ் அபாரம்; குஜராத் ஜெயிண்ட்ஸுக்கு 180 டார்கெட்!
சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடி ஓய்வுபெற்ற முன்னாள் வீரர்கள் கலந்துகொண்டு விளையாடும் லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடர் போட்டிகள் கொல்கத்தா ஈடன் கார்டனில் நடந்துவருகிறது.
இன்றைய போட்டியில் வீரேந்திர சேவாக் தலைமையிலான குஜராத் ஜெயிண்ட்ஸ் மற்றும் ஜாக் காலிஸ் தலைமையிலான இந்தியா கேபிடள்ஸ் அணிகளும் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் ஜெயிண்ட்ஸ் கேப்டன் சேவாக் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
முதலில் பேட்டிங் ஆடிய இந்தியா கேபிடள்ஸ் அணியின் ஆஷ்லி நர்ஸ் அதிரடியாக பேட்டிங் செய்து சதமடித்தார். அதிரடியாக ஆடி பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசிய ஆஷ்லி நர்ஸ், 43 பந்தில் 8 பவுண்டரிகள் மற்றும் 9 சிக்ஸர்களுடன் 103 ரன்களை குவித்தார்.
அவரைத்தவிர வேறு எந்த வீரருமே சரியாக ஆடவில்லை. ஆனாலும் ஆஷ்லி நர்ஸின் சதத்தால் 20 ஓவரில் 179 ரன்களை குவித்த இந்தியா கேபிடள்ஸ் அணி, 180 ரன்கள் என்ற கடின இலக்கை குஜராத் ஜெயிண்ட்ஸ் அணிக்கு நிர்ணயித்துள்ளது.