முரளிதரனின் வாழ்நாள் சாதனையை சமன்செய்து அசத்திய ரவிச்சந்திரன் அஸ்வின்!

Updated: Tue, Oct 01 2024 22:23 IST
Image Source: Google

வங்கதேச அணியானது இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணியானது அபாரமான வெற்றியைப் பெற்றதுடன் 2-0 என்ற கணக்கில் வங்கதேச அணியை வீழ்த்தி டெஸ்ட் தொடரையும் கைப்பற்றி அசத்தியது.

அதன்படி இன்று முடிவடைந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தி வீழ்த்தி அபார வெற்றியைப் பெற்றது.  மேலும் இப்போட்டியில் இரு இன்னிங்ஸிலும் அரைசதம் கடந்து அசத்திய யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆட்டநாயகன் விருதையும், இத்தொடரில் சதம் மற்றும் 11 விக்கெட்டுகளை கைப்பற்றிய ரவிச்சந்திரன் அஸ்வின் தொடர் நாயகன் விருதை வென்றார்.

இந்நிலையில் இத்தொடரில் தொடர் நாயகன் விருதை வென்று அசத்திய ரவிச்சந்திரன அஸ்வின், இலங்கை ஜாம்பவான் முத்தையா முரளிதரனின் சாதனையை சமன்செய்து அசத்தியுள்ளார். அதன்படி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றி அதிக தொடர்நாயகன் விருதை வென்ற வீரர் எனும் சாதனையை இலங்கை அணியின் முன்னாள் ஜாம்பவான் முத்தையா முரளிதரன் 11 டெஸ்ட் தொடர் நாயகன் விருதை வென்று படைத்திருந்தார். 

தற்போது இந்திய அணியின் ரவிச்சந்திரன் அஸ்வின் 11ஆவது முறையாக தொடர் நாயகன் விருதை வென்று அவரது சாதனையை தற்போது சமன்செய்து அசத்தியுள்ளார். இதற்கு அடுத்த இடத்தில் 9 முறை இந்த விருதை வென்று தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் வீரர் ஜாக்ஸ் காலிஸ் இரண்டாம் இடத்திலும், 8 முறை இந்த விருதை வென்று சர் ரிச்சர்ட் ஹார்ட்லி மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர். 

இந்திய அணிக்காக கடந்த 2010ஆம் ஆண்டு அறிமுகமான ரவிச்சந்திரன் அஸ்வின் இதுவரை 102 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில், பேட்டிங்கில் 6 சதங்கள் மற்றும் 14 அரைசதங்களுடன் 3423 ரன்களையும், பந்துவீச்சில் 37 முறை 5 விக்கெட்டுகளையும், 8 முறை 10 விக்கெட்டுகளையும் கைப்பற்றியதுடன் 527 விக்கெட்டுகளை கைப்பற்றி, இந்திய அணிக்காக அதிக டெஸ்ட் விக்கெட்டுகளை கைப்பற்றிய இரண்டாவது வீரர் எனும் சாதனையையும் படைத்து அசத்தியுள்ளார். 

Also Read: Funding To Save Test Cricket

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக முறை தொடர் நாயகன் விருதை வென்ற வீரர்கள் 

  • 11 - முத்தையா முரளிதரன்
  • 11 - ரவிச்சந்திரன் அஸ்வின்
  • 9 - ஜாக் காலிஸ்
  • 8 - சர் ரிச்சர்ட் ஹேண்ட்லி
  • 8 - இம்ரான் கான்
  • 8 - ஷேன் வார்னே
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை