ஆசிய கோப்பை 2022: இலங்கை vs ஆஃப்கானிஸ்தான் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!

Updated: Fri, Aug 26 2022 20:22 IST
Image Source: Google

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நாளை முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது. இதில் நாளை நடைபெறும் முதல் போட்டியில் இலங்கை - ஆஃப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - இலங்கை vs ஆஃப்கானிஸ்தான்
  • இடம் - துபாய் சர்வதேச மைதானம், துபாய்
  • நேரம் - இரவு 7.30 மணி (இந்திய நேரப்படி)

போட்டி முன்னோட்டம் 

தசுன் ஷானகா தலைமையிலான இலங்கை அணி சமீப காலமாக டி20 கிரிக்கெட்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. அதிலும் தனுஷ்கா குணத்திலகா, சரித் அசலங்கா, பதும் நிஷங்கா ஆகியோர் பேட்டிங்கில் அசத்தி வருகிறது.

அதேசமயம் பந்துவீச்சில் துஷ்மந்தா சமீரா காயம் காரணமாக தொடரிலிருந்து விலகியது அணிக்கு பெரும் இழப்பாக பார்க்கப்படுகிறது. அதனால் அஸிதா ஃபெர்னாண்டோ, சமீகா கருணரத்னே, தசுன் ஷானகா ஆகியோருடன் வநிந்து ஹசரங்கா, தனஞ்செய டி சில்வா ஆகியோரும் இருப்பது அந்த அணிக்கு பலமாக பார்க்கப்படுகிறது.

ஆஃப்கானிஸ்தான் அணி சமீபத்தில் அயர்லாந்துக்கு எதிரான தொடரில் ஆரம்பத்தில் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும், இறுதியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தியது. அணியின் பேட்டிங்கைப் பொறுத்தவரையில் ஹஸ்ரதுல்லா ஸஸாய், நஜிபுல்லா ஸத்ரான், உஸ்மான் கானி ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

பந்துவீச்சில் ரஷித் கான், முஜீப் உர் ரஹ்மான், முகமது நபி ஆகியோருடன் நூர் அஹ்மத், கரிம் ஜானத் ஆகியோரு சிறப்பாக செயல்பட்டு வருவது அணிக்கு சாதகமாக அமைந்துள்ளது.

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 1
  • இலங்கை - 1
  • ஆஃப்கானிஸ்தான் - 0

உத்தேச லெவன்

இலங்கை - பதும் நிஷங்க, தனுஷ்க குணதிலக்க, பானுக ராஜபக்ச, சரித் அசலங்க, தனஞ்சய டி சில்வா, தசுன் ஷனகா, வனிந்து ஹசரங்க, மஹீஷ் தீக்ஷனா, சாமிக்க கருணாரத்ன, அசித ஃபெர்னாண்டோ, ஜெப்ரி வான்டர்சே.

ஆஃப்கானிஸ்தான் - நஜிபுல்லா ஸ்த்ரான், ஹஸ்ரத்துல்லா ஸஸாய், இப்ராஹிம் ஸத்ரான், உஸ்மான் கனி, ரஹ்மானுல்லா குர்பாஸ், முகமது நபி, ரஷித் கான், முஜீப் உர் ரஹ்மான், நவீன் உல் ஹக், நூர் அகமது, கரீம் ஜனத்.

ஃபேண்டஸி லெவன்

  • விக்கெட் கீப்பர் - ரஹ்மானுல்லா குர்பாஸ்
  • பேட்டர்ஸ் – சரித் அசலங்க, ஹசர்துல்லா ஜசாய், பாத்தும் நிஸ்ஸங்க, பானுக ராஜபக்ஷ
  • ஆல்-ரவுண்டர்கள் - தசுன் ஷனக, முகமது நபி, வனிந்து ஹசரங்க
  • பந்துவீச்சாளர்கள் - நவீன்-உல்-ஹக், மகேஷ் தீக்ஷனா, ரஷித் கான்
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை