ஆசிய கோப்பை 2022: இலங்கையை பந்தாடியது ஆஃப்கானிஸ்தான்!

Updated: Sat, Aug 27 2022 22:30 IST
Image Source: Google

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று தொடங்கியது. இன்று துபாயில் நடந்துவரும் முதல் போட்டியில் பி பிரிவில் இடம்பெற்றுள்ள இலங்கை மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் ஆடிவருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

முதலில் பேட்டிங் ஆடிய இலங்கை வீரர்கள் முதல் ஓவரிலிருந்தே விக்கெட்டுகளை இழக்க ஆரம்பித்தனர். முதல் ஓவரிலேயே குசால் மெண்டிஸ் மற்றும் சாரித் அசலங்கா ஆகிய இருவரையும் ஃபரூக்கி வீழ்த்தினார். நவீன் உல் ஹக் வீசிய 2வது ஓவரின் பதும் நிசாங்கா ஆட்டமிழந்தார். 

அதன்பின்னர் பானுகா ராஜபக்சா மட்டும் அதிரடியாக பேட்டிங் ஆடி 38 ரன்கள் அடித்தார். ஆனால் நன்றாக ஆடிய அவரும் ரன் அவுட்டாகி வெளியேறினார்.  தொடக்கம் முதலே சீரான இடைவெளியில் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்த இலங்கை அணி, வெறும் 105 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

ஆஃப்கானிஸ்தான் அணி சார்பில் ஃபரூக்கி அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளையும், முஜீபுர் ரஹ்மான் மற்றும் முகமது நபி ஆகிய இருவரும் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதையடுத்து 106 ரன்கள் என்ற எளிய இலக்கை துரத்திய ஆஃப்கானிஸ்தான் அணி ஹஸ்ரதுல்லா ஸஸாய் - ரஹ்மனுல்லா குர்பாஸ் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அணியின் வெற்றியை உறுதிசெய்தனர். 

அதன்பின் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ரஹ்மனுல்லா குர்பாஸ் 40 ரன்களில் ஆட்டமிழக்க, ஆவரைத் தொடர்ந்து இப்ராஹிம் ஸத்ரான் 15 ரன்களில் விக்கெட்டை இழந்தார். 

இருப்பினும் ஆஃப்கானிஸ்தான் அணி 10.1 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன், 8 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றியைப் பதிவுசெய்தது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை