பாகிஸ்தான் வீரர்கள் எங்களை விட சிறப்பாக விளையாடினர் - ரோஹித் சர்மா!

Updated: Mon, Sep 05 2022 07:40 IST
Asia Cup 2022: Wickets of Hardik, Rishabh was not needed at that time, says Rohit Sharma (Image Source: Google)

ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றின் இரண்டாவது லீக போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

முதலில் களமிறங்கிய இந்திய அணியில் ஓபனர்கள் கேஎல் ராகுல், ரோஹித் சர்மா இருவரும் தலா 28 ரன்களை சேர்த்து ஆட்டமிழந்த நிலையில் தொடர்ந்து விராட் கோலி அபாரமாக விளையாடி 60 ரன்களைச் சேர்த்து அசத்தினார். அவ்வளவுதான், அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் 13, ரிஷப் பந்த் 14, ஹார்திக் பாண்டியா 0 (2), தீபக் ஹூடா 16 (14) ஆகியோர் பெரிய ஸ்கோர் அடிக்காமல் ஆட்டமிழந்தனர். 

இதனால் 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 181 ரன்களைச் சேர்த்தது. இதையடுத்து இலக்கை துரத்திக் களமிறங்கிய பாகிஸ்தான் அணியல் ஓபனர் முகமது ரிஸ்வான் 51 பந்துகளில் 71 ரன்களை குவித்து அசத்தினார். பாபர் அசாம் 14, பக்கமர் ஜமான் 15 (15) ஆகியோர் சிறப்பாக செயல்படவில்லை.

இந்நிலையில் 5ஆவது இடத்தில் களமிறங்கிய முகமது நவாஸ் 20 பந்துகளில் 42 ரன்களை குவித்து அசத்தினார். அடுத்து 2 ஓவர்களில் 26 ரன்கள் தேவைப்பட்டபோது, கடைசியாக இரு அணிகளுக்கு இடையில் ஹார்திக் பாண்டியா அதிரடி காட்டியதுபோல், இம்முறை ஆசிஃப் அலி 19ஆவது ஓவரில் புவனேஷ்வர் குமாருக்கு எதிராக ஒரு சிக்ஸர், 2 பவுண்டரி உட்பட 19 ரன்களை சேர்த்தார்.

இதனால், இறுதி ஓவரில் 7 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. அப்போதும் அர்ஷ்தீப் சிங் ஓவரில் ஆசிஃப் அலி ஒரு பவுண்டரி அடித்ததால், பாகிஸ்தான் அணி 19.5 ஓவரில் 182/5 ரன்களை குவித்து, 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றியைப் பெற்றது.

இப்போட்டியில் தோற்றப் பிறகு பேசிய ரோஹித் சர்மா, ‘‘அழுத்தம் நிறைய போட்டிகளில் ஒவ்வொரு பந்தும் மிகமுக்கியம். முகமது ரிஸ்வான், நவாஸ் இருவரும் சிறப்பான முறையில் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். எல்லா அணிகளுகும் கிளாஸ் இருக்கும். பாகிஸ்தான் அதனை சிறப்பாக வெளிப்படுத்தினார்கள். இரண்டாவது இன்னிங்ஸின்போது பிட்ச் பேட்டர்களுக்கு ஓரளவுக்கு ஒத்துழைப்பு தரும் எனக் கருதினோம். அப்படித்தான் இருந்தது

180 ரன்கள் என்பது அனைத்து பிட்ச்களிலும் சவாலான ஸ்கோர்தான். சிறப்பாக விளையாடினால், நிச்சயம் வெற்றியைப் பெற்றிருக்க முடியும். கோலி இன்று அபாரமாக விளையாடினார். அவரது ரன்கள்தான் முக்கியமானதாக இருந்தது. ரிஷப் பந்த் அந்த நேரத்தில், அப்படி ஷாட் அடித்து ஆட்டமிழந்திருக்க கூடாது. இதைத்தான், ஓய்வு அறையில் அவரிடம் கூறினேன். பெரிய தவறு. ஹார்திக் பாண்டியாவும் தவறான ஷாட் ஆடிதான் ஆட்டமிழந்தார்’’ எனக் கூறினார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை