ஆசிய கோப்பை 2022: எனக்கு முழு நம்பிக்கை இருந்தது - ஹர்திக் பாண்டியா!

Updated: Mon, Aug 29 2022 08:53 IST
Image Source: Google

ஆசியக் கோப்பை இரண்டாவது லீக் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணி 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 147 ரன்களை மட்டுமே எடுத்தது. இந்திய அணி தரப்பில் புவனேஷ்வர் குமார் 4 விக்கெட்டுகளையும், ஹர்திக் பாண்டியா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இதையடுத்து இலக்கைத் துரத்திய இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, கேஎல் ராகுல் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். பின்னர் விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா, ஹர்திக் பாண்டியா ஆகியோரது சிறப்பான ஆட்டத்தின் மூலம் 19.4 ஓவர்களில் இலக்கை எட்டி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.

அதில் இந்தியா வெற்றிபெற கடைசி ஓவருக்கு 7 ரன்கள் தேவைப்பட்டபோது, இடது கை ஸ்பின்னர் முகமது நவாஸ் பந்துவீச வந்தார். வேகப்பந்து வீச்சாளர்களுக்கு கோட்டா முடிந்துவிட்டதால், வேறு வழியும் இல்லை. அப்போது முதல் பந்தில் ஜடேஜாவை போல்ட் ஆக்கினார். தொடர்ந்து தினேஷ் கார்த்திக் அடுத்த பந்தில் சிங்கில் எடுத்துக் கொடுத்த, ஹார்திக் டாட் பால் விளையாடினார். இதனால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் அடுத்த பந்தில் சிக்ஸர் விளாசி அணிக்கு வெற்றியைப் பெற்றுக்கொடுத்தார்.

இந்நிலையில் கடைசி ஓவர் குறித்து பேசிய ஹார்திக் பாண்டியா,“கடைசி ஓவரை ஒரு இடது கை ஸ்பின்னர், அதுவும் அனுபவமில்லா ஸ்பின்னர்தான் வீசப் போகிறார் என்பது தெரியும். அப்போது கடைசி ஓவருக்கு 7 ரன்கள் தேவைப்பட்டது. 15 ரன்கள் தேவைப்பட்டிருந்தாலும் அடித்திருப்பேன். காரணம், கடைசி ஓவரிஇல் எப்போதும் பேட்ஸ்மேனைவிட பந்துவீச்சாளர் நெருக்கடியில் இருப்பார். அதுவும் அனுபவ ஸ்பின்னர் என்பதால் முழு நம்பிக்கை இருந்தது” எனக் கூறினார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை