16ஆவது சீசன் ஆசியக் கோப்பை தொடர் ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தில் தற்பொழுது ஹைபிரிட் முறையில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை என இரு நாடுகளில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான், நேபாள் ஆகிய மூன்று அணிகள் ஒரு குழுவிலும், இலங்கை, வங்கதேசம், ஆஃப்கானிஸ்தான் ஆகிய மூன்று அணிகள் மற்றும் ஒரு குழுவிலும் இடம் பெற்று இருக்கின்றன.

Advertisement

இதில் ஒரு குழுவில் இருக்கும் மூன்று அணிகள், தங்கள் குழுவில் உள்ள அணிகளுடன், ஒரு போட்டியில் மோத வேண்டும். அதாவது முதல் சுற்றில் இரண்டு போட்டிகள் கிடைக்கும். இதில் மூன்று அணிகளில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றுக்கும் முன்னேறும். இதேபோல் இன்னொரு குழுவில் இருந்தும் இரண்டு அணிகள் அடுத்த சுற்றுக்கும் முன்னேறும். 

Advertisement

இந்த நான்கு அணிகளையும் கொண்டு, இரண்டாவது சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் ஒரு முறை மோத வைத்து, அதில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டிக்கு அனுப்பப்பட்டு, சாம்பியன் அணி கண்டறியப்படும். இந்த நிலையில் இந்தியா இடம்பெற்றுள்ள குழுவில் பாகிஸ்தான் நேபால் அணிகள் மோதிய போட்டியில், பாகிஸ்தான அணி 238 ரன்கள் வித்தியாசத்தில் வென்றும், இரண்டாவது மற்றும் கடைசிப்போட்டி இந்திய அணி உடன் டிரா ஆக, புள்ளிப் பட்டியலில் தற்பொழுது முதல் இடத்தில் இருக்கிறது.

இந்த நிலையில் இந்தக் குழுவில் இந்தியா, நேபாள் அணிகள் மோதிக் கொள்ளும் ஒரு போட்டி எஞ்சி இருக்கிறது. இந்த இரு அணிகளுக்கும் இதுவே கடைசிப் போட்டி. நேபாள் அணி முதல் போட்டியில் தோற்று இருக்கிறது. இந்திய அணி விளையாடிய போட்டி டிரா ஆகி இருக்கிறது. நாளை இந்தியா, நேபாள் அணிகள் மோதிக் கொள்ளும் போட்டியிலும் மழை வருவதற்கான அதிகபட்ச வாய்ப்புகள் இருப்பதாக வானிலை அறிக்கைகள் தெரிவிக்கின்றன. 

எனவே நாளைய போட்டி மழையால் கைவிடப்பட்டால், இந்திய அணி இரண்டு டிராவுடன் அடுத்த சுற்றுக்கு முன்னேறும். அதே சமயத்தில் ஒரு தோல்வி ஒரு டிராவுடன் நேபாள் அணி வெளியேறும். ஒருவேளை மிகப்பெரிய அதிசயமாக நேபாள் அணி இந்திய அணியை வீழ்த்தினால், இந்திய அணி அதிர்ச்சியாக ஆசிய கோப்பை தொடரின் முதல் சுற்றோடு வெளியேறும். அதேசமயம்  இந்த இரு அணிகள் மோதிக் கொள்ளும் போட்டி மழையால் டிரா ஆக அதிக வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News