யு19 உலகக்கோப்பை 2024 அரையிறுதி 2: ஆஸ்திரேலியா vs பாகிஸ்தான் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!

Updated: Wed, Feb 07 2024 15:01 IST
Image Source: Google

அண்டர்19 வீரர்களுக்கான ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் நாளை நடைபெறும் இரண்டாவது அரையிறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா அண்டர் 19 அணியை எதிர்த்து பாகிஸ்தான் அண்டர் 19 அணி பலப்பரீட்சை நடத்துகிறது. இப்போட்டியில் வெற்றிபெறும் அணி இந்திய அணிக்கெதிராக இறுதிப்போட்டியில் விளையாடும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - ஆஸ்திரேலியா யு19 அணி vs பாகிஸ்தான் யு19 அணி
  • இடம் - வில்லோமூர் பார்க், பெனோனி
  • நேரம் - மதியம் 1.30 மணி (இந்திய நேரப்படி)

நேரலை

ஐசிசி அண்டர் 19 ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரை இந்திய ரசிகர்கள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சில் கண்டு களிக்கலாம். அதேபோல் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்திலும் இத்தொடர் நேரலை செய்யப்படுகிறது.

பிட்ச் ரிப்போர்ட்

இந்தியா - தென் ஆப்பிரிக்க அணிகள் மோதும் இப்போட்டி நடைபெறும் பெனோனி கிரிக்கெட் மைதானம் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமான மைதானமாக பார்க்கப்படுகிறது. இருப்பினும் பந்தை ஸ்விங் செய்யக்கூடிய வேகப்பந்து வீச்சாளர்களால் இந்த மைதானத்தில் தாக்கத்தை ஏற்படுத்த முடியும். மேலும் இந்த மைதானத்தில் ரன்களைச் சேர்ப்பது கடினம் என்பதால், பேட்டர்கள் பொறுமையாக விளையாடி ரன்களைச் சேர்ப்பது அணியின் வெற்றிக்கு உதவலாம்.

உத்தேச லெவன்

ஆஸ்திரேலியா யு19 அணி: ஹாரி டிக்சன், ஹர்ஜாஸ் சிங், சாம் கான்ஸ்டாஸ், ஹக் வெய்ப்ஜென் (கே), ஆலிவர் பீக், லாச்லன் ஐட்கென், ராஃப் மேக்மில்லன், ஹர்கிரத் பஜ்வா, டாம் ஸ்ட்ரேக்கர், மஹ்லி பியர்ட்மேன், கேலம் விட்லர்

பாகிஸ்தான் யு19 அணி: ஷாமில் ஹுசைன், ஷாஜாய்ப் கான், அஸான் அவாய்ஸ், சாத் பைக் (கா), அஹ்மத் ஹசன், ஹாரூன் அர்ஷத், அராஃபத் மின்ஹாஸ், உபைத் ஷா, முகமது ஜீஷான், அலி அஸ்ஃபாண்ட், அலி ரஸா.

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர்: சாத் பெய்க்
  • பேட்டர்ஸ்: ஷாஜாய்ப் கான், ஹாரி டிக்சன், ஹக் வெய்ப்ஜென் (துணை கேப்டன்)
  • ஆல்-ரவுண்டர்கள்: அராபத் மின்ஹாஸ், டாம் ஸ்ட்ரேக்கர்
  • பந்துவீச்சாளர்கள்: மஹ்லி பியர்ட்மேன், காலம் விட்லர், உபைத் ஷா (கேப்டன்), ரஃப் மேக்மில்லன்

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை