சாம்பியன்ஸ் கோப்பை 2025: ஆஸ்திரேலியா vs இங்கிலாந்து - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!

Updated: Fri, Feb 21 2025 15:44 IST
Image Source: Cricketnmore

Australia vs England Dream11 Prediction, ICC Champion Trophy 2025: ஐசிசி ஆடவர் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரின் 2025ஆம் ஆண்டு சீசனானது பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் நாளை நடைபெறும் நான்காவது லீக் போட்டியில் குரூப் பி பிரிவில் இடம்பிடித்துள்ள இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. 

இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது லாகூரில் உள்ள கடாஃபி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி சமீபத்தில் இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் அடுத்தடுத்து தோல்விகளைச் சந்தித்து ஒயிட்வாஷ் ஆனது. அதேசமயம் ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியும் இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஒயிட்வாஷ் ஆனது. அடுத்தடுத்து தோல்வியை சந்தித்து வரும் இரு அணிகளும் மோதவுள்ளதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.

AUS vs ENG ICC Champion Trophy 2025: போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள்-  ஆஸ்திரேலியா vs இங்கிலாந்து
  • இடம் -  கடாஃபி கிரிக்கெட் மைதானம், லாகூர்
  • நேரம் - பிப்ரவரி 22, மதியம் 2.30 மணி (இந்திய நேரப்படி)

AUS vs ENG Match Pitch Report

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இப்போட்டி லாகூரில் உள்ள கடாஃபி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த மைதானத்தில் இதுவரை 74 ஒருநாள் போட்டிகள் நடைபெற்றுள்ள நிலையில், அதில் 37 போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்த அணியும், 35 முறை சேஸிங் செய்த அணிகளும் வெற்றியைப் பதிவுசெய்துள்ளன. இந்த மைதானத்தில் முதல் இன்னிங்ஸின் சராசரி ஸ்கோர் 253 ரன்களாக உள்ள நிலையில், இங்கு குவிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோராக 375 ரன்கள் உள்ளது. இதனால் நிச்சயம் இப்போட்டியில் வான வேடிக்கைகளுக்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. 

AUS vs ENG: Where to Watch?

ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரின் அனைத்து போட்டிகளையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி இந்தியாவில் நேரலை ஒளிபரப்பு செய்கிறது. அதேசமயம் ஆன்லைனில் பார்க்க விரும்பும் ரசிகர்கள் ஜியோ ஹாட்ஸ்டாரிலும் நேரலையில் கணலாம்.

AUS vs ENG ODI Head To Head Record

  • மோதிய போட்டிகள் - 160
  • ஆஸ்திரேலியா - 90
  • இங்கிலாந்து - 65
  • முடிவில்லை - 05

AUS vs ENG ODI Dream11 Team

  • விக்கெட் கீப்பர் - ஜோஸ் பட்லர், பில் சால்ட்
  • பேட்டர்கள் - ஸ்டீவ் ஸ்மித் (துணை கேப்டன்), டிராவிஸ் ஹெட் (கேப்டன்), பென் டக்கெட், ஹாரி புரூக்
  • ஆல்-ரவுண்டர்கள் - கிளென் மேக்ஸ்வெல், ஜோ ரூட், மேத்யூ ஷார்ட்
  • பந்து வீச்சாளர்- அடில் ரஷீத், ஆடம் ஸாம்பா

Australia vs England Probable Playing XI

Australia Probable Playing XI: டிராவிஸ் ஹெட், மேத்யூ ஷார்ட், மார்னஸ் லபுஷாக்னே, ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), அலெக்ஸ் கேரி, கிளென் மேக்ஸ்வெல், ஆரோன் ஹார்டி, சீன் அபோட், ஆடம் ஸாம்பா, ஸ்பென்சர் ஜான்சன், நாதன் எல்லிஸ்.

England Playing XI: பில் சால்ட், பென் டக்கெட், ஜேமி ஸ்மித், ஜோ ரூட், ஹாரி ப்ரூக், ஜோஸ் பட்லர் (கேப்டன்), லியாம் லிவிங்ஸ்டோன், பிரைடன் கார்ஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர், அடில் ரஷித், மார்க் வுட்.

AUS vs ENG ODI Dream11 Prediction, Australia vs England Dream11 Team, Today Match AUS vs ENG, ICC Champion Trophy 2025, AUS vs ENG Dream11 Team, Fantasy Cricket Tips, AUS vs ENG Pitch Report, Today Match Prediction, Tri-Nation Series Match Final, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between Australia vs England

Also Read: Funding To Save Test Cricket

Disclaimer: இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை