AUS vs WI, 1st Test: ஏமாற்றிய வார்னர்; தடுமாறிய ஆஸ்திரேலியா!
ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியானது இன்று உலகின் அதிவேக ஆடுகளங்களில் ஒன்றான பெர்த்தில் நாளை தொடங்குகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு டேவிட் வார்னர் - உஸ்மான் கவாஜா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நட்சத்திர வீரர் டேவிட் வார்னர் 5 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் ஜெய்டன் சீல்ஸ் பந்துவீச்சில் க்ளீன் போல்டாகி பெவிலியன் திரும்பினார்.
இதையடுத்து ஜோடி சேர்ந்த உஸ்மான் கவாஜா - மார்னஸ் லபுசாக்னே இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் விக்கெட்டை இழப்பை தடுத்தனர். தொடர்ந்து பொறுப்பாக விளையாடிய இருவரும் 50 ரன்களை பார்ட்னர்ஷிப் முறையில் கடந்துள்ளனர்.
இதன்மூலம் முதல்நாள் உணவு இடைவேளையின் போது ஆஸ்திரேலிய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 72 ரன்களை எடுத்துள்ளது. இதில் உஸ்மான் கவாஜா 36 ரன்களுடனும், மார்னஸ் லபுசாக்னே 26 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.