AUSW vs INDW: ஃபாலோ ஆனை தவிர்க்க போராடும் ஆஸி..!

Updated: Sat, Oct 02 2021 20:08 IST
Image Source: Google

இந்தியா - ஆஸ்திரேலியா மகளிர் அணிகள் மோதும் பகலிரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி குயின்ஸ்லேண்டில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதன்படி, முதலில் பேட் செய்த இந்திய மகளிர் அணி முதல் இன்னிங்ஸில் 145 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 377 ரன்கள் குவித்து டிக்ளர் செய்தது. 

இதைத் தொடர்ந்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீராங்கனைகளாக அலிசா ஹீலி - பெத் மூனி களமிறங்கினர். மூனி 4 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தபோது ஜுலான் கோஸ்வாமி பந்துவீச்சில் போல்டாக்கி வெளியேறினார். 

அதன்பிறகு, ஹீலியுடன் இணைந்து கேப்டன் மெக் லேனிங் சிறிய பாட்னர்ஷிப்பை அமைத்தார். 29 ரன்கள் எடுத்த ஹீலியையும் கோஸ்வாமி வீழ்த்தினார்.

அவரைத் தொடர்ந்து மெக் லேனிங்கும் 38 ரன்களுக்கு பூஜா வஸ்த்ராகர் பந்தில் ஆட்டமிழந்தார். இதேபோல தஹிலா மெக்ராத்தும் 28 ரன்கள் எடுத்து பூஜா வஸ்த்ராகரிடம் வீழ்ந்தார்.

Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021

சீரான இடைவெளியில் விக்கெட்டுகளைப் பறிகொடுத்த ஆஸ்திரேலிய மகளிர் அணி 3ஆம் நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 143 ரன்கள் எடுத்துள்ளது. முதல் இன்னிங்ஸில் அந்த அணி இன்னும் 234 ரன்கள் பின்தங்கிய நிலையில் நாளை நான்காவது நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை