AUSW vs INDW: 241 ரன்களில் டிக்ளர் செய்த ஆஸி., வலிமையான நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்தியா!

Updated: Sun, Oct 03 2021 12:54 IST
Image Source: Google

ஆஸ்திரேலியா-இந்தியா மகளிர் அணிகளுக்கு இடையேயான பகலிரவு டெஸ்ட் போட்டி குயின்ஸ்லேண்டில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய மகளிர் அணி முதல் இன்னிங்ஸில் 377 ரன்களை குவித்து டிக்ளர் செய்தது. 

இதையடுத்து இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு அலிசா ஹீலி - பெத் மூனி ஆகியோா் தொடக்கம் தந்தனர். இதில் மூனி 4 ரன்களிலும், ஹீலி 24 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதன்பின் சிறப்பாக விளையாடிய எல்லிஸ் பெர்ரி அரைசதம் அடித்து அசத்தினார். 

பின் அவரும் 68 ரன்களுடன் நடையைக் கட்ட அடுத்து வந்த வீராங்கனைகள் இந்திய அணி பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 

இதனால் நான்காம் நாள் உணவு இடைவேளைக்கு முன்னதாக ஆஸ்திரேலிய அணி 249 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்திருந்த நிலையில் டிக்ளர் செய்வதாக அறிவித்தது. இந்திய அணி தரப்பில் பூஜா வஸ்த்கர் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். 

Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021

இதன்மூலம் இந்திய மகளிர் அணி 138 ரன்கள் முன்னிலையுடன் இன்று இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கி விளையாடிவருகிறது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை