பந்துவீச்சாளர்களை புரட்டியெடுத்த வார்னர், ஹெட்; ஆஸ்திரேலியா புதிய சாதனை!

Updated: Sat, Oct 28 2023 11:45 IST
Image Source: Google

ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இன்று இமாச்சல் பிரதேஷ் தரம்சாலா மைதானத்தில் மிக முக்கியமான போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடி வருகின்றன. இன்றைய போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு டிராவிஸ் ஹெட் திரும்ப வந்திருக்கிறார். கேமரூன் கிரீன் நீக்கப்பட்டு இருக்கிறார். நியூசிலாந்து தரப்பில் சாப்மேன் காயம் காரணமாக இடம்பெறவில்லை. அவருடைய இடத்தில் ஜிம்மி நீசம் இடம் பெற்றிருக்கிறார்.

இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அடுத்த அரை மணி நேரத்தில் இந்த முடிவை எடுத்ததற்காக மொத்த நியூசிலாந்து கிரிக்கெட் அணி நிர்வாகமும் வருத்தப்பட வேண்டி இருந்தது. ஆஸ்திரேலிய அணிக்கு தொடக்க வீரர்களாக வந்த டிராவிஸ் ஹெட் மற்றும் டேவிட் வார்னர் இருவரும் அதிரடியில் நியூசிலாந்து பந்துவீச்சை மைதானத்தின் எல்லாப் பக்கத்திலும் அடித்து நொறுக்கினார்கள்.

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ICC (@icc)

காயத்தில் இருந்து திரும்ப வந்த ஹெட் அப்படி எதையும் காட்டவில்லை. தொடர்ந்து இந்த உலகக் கோப்பையில் விளையாடியவர் போல விளாசி தள்ளினார். இன்னொரு முனையில் டேவிட் வார்னர் தன்னுடைய சிறப்பான பேட்டி ஃபார்மை மேலும் தீவிரப்படுத்தினார். சிறப்பாக விளையாடிய டேவிட் வார்னர் 28 பந்துகளில் மூன்று பவுண்டரி மற்றும் ஐந்து சிக்ஸர்கள் உடன் அரைசதம் அடித்தார். இதற்கடுத்து டிராவிஸ் ஹெட் 25 பந்துகளில் ஆறு பவுண்டரி மற்றும் நான்கு சிக்ஸர்கள் உடன் தன்னுடைய அரை சதத்தை அடித்தார்.

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ICC (@icc)

இந்த ஜோடி 8.5 ஓவரில் நூறு ரன்களை கடந்தது. மேலும் 10 ஓவர்கள் முடிவில் 118 ரன்கள் எடுத்தது. மேலும் முதல் 10 ஓவர்களில் 10 சிக்ஸர்கள் அடித்து நொறுக்கியது. இன்றைய போட்டியில் இந்த உலகக் கோப்பையில் டிராவிஸ் ஹெட் குறைந்த பந்துகளில் அரை சதம் அடித்திருக்கிறார். பவர் பிளேவில் பதிவான இரண்டாவது அதிகபட்ச ரன்களாக உலகக்கோப்பையில் இது அமைந்தது. மேலும் 1999 உலகக் கோப்பைக்கு பிறகு முதல் 10 ஓவரில் பத்து சிக்ஸர்கள் அடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை