இந்தியாவில் இந்த வருடம் அக்டோபர் மாதம் 5ஆம் தேதி முதல் ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை தொடர் நடைபெறவுள்ளது. மேலும் இந்தியாவில் முதல்முறையாக முழுமையாக நடத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுவதாலும், பல சிறப்புமிக்க தருணங்களையும் நினைவுகளையும் உள்ளடக்கி இருக்கக்கூடிய உலகக்கோப்பை தொடர் என்பதாலும், அதிகபட்ச சவால்கள் இருக்கும் உலகக் கோப்பை தொடர் என்பதாலும், ரசிகர்கள் தாண்டி கிரிக்கெட் வீரர்கள் வரை எதிர்ப்பார்க்கும் உலகக்கோப்பை தொடராக இருக்கிறது.

Advertisement

நடைபெற இருக்கும் உலகக்கோப்பை தொடர் குறித்தும் இந்திய அணி குறித்தும் பேசியுள்ள ஆஸ்திரேலிய சுழற் பந்துவீச்சாளர் பிராட் ஹக் கூறுகையில் “ஆஸ்திரேலியா ஸ்டார்க் உடன் ஒரு சிறந்த வேகப்பந்துவீச்சு தாக்குதலை கொண்டு உள்ளார்கள். அவர் புதிய பந்தில் சிறிது சேதாரங்களை எதிரணிகளுக்கு ஏற்படுத்தலாம். எங்களிடம் சுழற் பந்துவீச்சாளராக ஆடம் ஜாம்பா இருக்கிறார். அவர் மிடில் ஓவர்களை கட்டுப்படுத்துவார். இப்படி சிறப்பான விஷயங்கள் ஆஸ்திரேலியாவிடம் இருக்கிறது.

இந்தியாவை நாக் அவுட் போட்டியில் வீழ்த்தி, உலகக் கோப்பையில் இருந்து வெளியே அனுப்பக்கூடிய அணியாக ஆஸ்திரேலிய மட்டும்தான் இருக்கும் என்று நான் நினைக்கிறேன். அவர்கள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் ஆசஸ் தொடர்களை வென்று உள்ளார்கள். இதனால் அவர்கள் ஸ்விட்ச் ஆன் செய்யப்பட்டு இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.

இந்தியாவைப் பொறுத்தவரை ஸ்ரேயாஸ் ஐயரைஎங்கே வைப்பது? ராகுல் காயம் சரியாகி விட்டதா?என்ற கேள்விகள் இருக்கிறது. ரிஷப் பந்த் இல்லாத காரணத்தால் ராகுலை வைத்துக் கொள்ள வேண்டி இருக்கிறது. மிடில் ஆர்டரில் யார் இருப்பார்கள் என்பதை பார்க்க ஆர்வமாக இருக்கிறேன். அது ரவீந்திர ஜடேஜாவாக இருக்கலாம். மேலும் சர்துல் தாக்கூர் உடன் செல்வார்களா என்பதையும் பார்க்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News