ஐந்தாண்டுகளுக்கு பிறகு இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஆஸ்திரேலியா!
ஆஸ்திரேலிய அணி வரும் ஜூன் மாதன் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று டி20, ஐந்து ஒருநாள், இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது.
இத்தகவலை இலங்கை கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. அதன்படி ஜூன் 7ஆம் தேதி டி20 போட்டிகளுடன் தொடங்கும் இத்தொடரானது ஜூலை 12ஆம் தேதி முடிவடைகிறது.
மேலும் டி20 மற்றும் ஒருநாள் தொடர்களானது பிரமதாசா மைதானம், பல்லகலே மைதானத்தில் நடைபெறவுள்ளது. அதேசமயம் டெஸ்ட் தொடரானது கலே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து இலங்கை கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆஸ்திரேலிய அணி ஐந்தாண்டுகளுக்கு பிறகு இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொள்வது மகிழ்ச்சியளிக்கிறது. இதில் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரும் இடம்பெற்றுள்ளதால், அது எங்களுக்கு டி20 உலகக்கோப்பைக்கு பயிற்சியாக அமையும். மேலும் ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களும் எங்களுக்கு மிகவும் முக்கியமானதாகும்.
ஏனெனில் நாங்கள் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் முன்னேறுவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம், மேலும் 2023ஆம் ஆண்டு ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பைக்கு தயாராகி வருகிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவின் இலங்கை சுற்றுப்பயணம்
- ஜூன் 7: முதல் டி20, கொழும்பு
- ஜூன் 8: இரண்டாவது டி20, கொழும்பு
- ஜூன் 11: மூன்றாவது டி20, கண்டி
- ஜூன் 14: முதல் ஒருநாள் போட்டி, கண்டி
- ஜூன் 16: இரண்டாவது ஒருநாள் போட்டி, கண்டி
- ஜூன் 19: மூன்றாவது ஒருநாள் போட்டி, கொழும்பு
- ஜூன் 21: நான்காவது ஒருநாள் போட்டி, கொழும்பு
- ஜூன் 24: ஐந்தாவது ஒருநாள் போட்டி, கொழும்பு
- ஜூன் 29 - ஜூலை 3: முதல் டெஸ்ட், கலே
- ஜூலை 8-12: இரண்டாவது டெஸ்ட், கலே