ஆஸ்திரேலிய அணி வரும் ஜூன் மாதன் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று டி20, ஐந்து ஒருநாள், இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது. 

Advertisement

இத்தகவலை இலங்கை கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. அதன்படி ஜூன் 7ஆம் தேதி டி20 போட்டிகளுடன் தொடங்கும் இத்தொடரானது ஜூலை 12ஆம் தேதி முடிவடைகிறது. 

Advertisement

மேலும் டி20 மற்றும் ஒருநாள் தொடர்களானது பிரமதாசா மைதானம், பல்லகலே மைதானத்தில் நடைபெறவுள்ளது. அதேசமயம் டெஸ்ட் தொடரானது கலே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இலங்கை கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆஸ்திரேலிய அணி ஐந்தாண்டுகளுக்கு பிறகு இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொள்வது மகிழ்ச்சியளிக்கிறது. இதில் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரும் இடம்பெற்றுள்ளதால், அது எங்களுக்கு டி20 உலகக்கோப்பைக்கு பயிற்சியாக அமையும். மேலும் ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களும் எங்களுக்கு மிகவும் முக்கியமானதாகும்.

ஏனெனில் நாங்கள் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் முன்னேறுவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம், மேலும் 2023ஆம் ஆண்டு ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பைக்கு தயாராகி வருகிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவின் இலங்கை சுற்றுப்பயணம்

  • ஜூன் 7: முதல் டி20, கொழும்பு
  • ஜூன் 8: இரண்டாவது டி20, கொழும்பு
  • ஜூன் 11: மூன்றாவது டி20, கண்டி
  • ஜூன் 14: முதல் ஒருநாள் போட்டி, கண்டி
  • ஜூன் 16: இரண்டாவது ஒருநாள் போட்டி, கண்டி
  • ஜூன் 19: மூன்றாவது ஒருநாள் போட்டி, கொழும்பு
  • ஜூன் 21: நான்காவது ஒருநாள் போட்டி, கொழும்பு
  • ஜூன் 24: ஐந்தாவது ஒருநாள் போட்டி, கொழும்பு
  • ஜூன் 29 - ஜூலை 3: முதல் டெஸ்ட், கலே
  • ஜூலை 8-12: இரண்டாவது டெஸ்ட், கலே
Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News