AUS vs SL, 3rd T20I: இலங்கையை 121 ரன்களில் சுருட்டிய ஆஸி!
ஆஸ்திரேலியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி கான்பெர்ராவில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய இலங்கை அணி தொடக்கம் முதலே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் ஜோடி சேர்ந்த தினேஷ் சண்டிமல் - தசுன் ஷானகா இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தியது.
பின் சண்டிமல் 25 ரன்களில் ஆட்டமிழக்க, இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த தசுன் ஷனகா 39 ரன்களைச் சேர்த்தார்.
இதனால் 20 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 6 விக்கெட்டுகளை இழந்து 121 ரன்களை மட்டுமே சேர்த்தது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் கேன் ரிச்சர்ட்சன் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.