24 ஆண்டுகள் கழித்து பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஆஸ்திரேலியா!
ஆஸ்திரேலிய அணி அடுத்த ஆண்டு மார்ச் மாதம் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள், 3 டெஸ்ட், ஒரு டி20 போட்டிகள் அடங்கிய தொடரில் விளையாடவுள்ளது.
அதன்படி டெஸ்ட் தொடர் மார்ச் 3 அன்று தொடங்கி மார்ச் 25ஆம் தேதியில் முடிவடைகிறது. மேலும் இந்த டெஸ்ட் தொடர் கராச்சி, ராவல்பிண்டி, லாகூரில் நடைபெறுகின்றன.
அதேசமயம் ஒருநாள், டி20 தொடர்கள் லாகூரில் நடைபெறுகின்றன. மார்ச் 29ஆம் தேதி முதல் தொடங்கும் ஒருநாள் தொடர், ஏப்ரல் 2-ஆம் தேதியுடனும், டி20 போட்டி ஏப்ரல் 5ஆம் தெதியும் நடைபெறுகிறது.
Also Read: T20 World Cup 2021
முன்னதாக 1998ஆம் ஆண்டு பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆஸ்திரேலிய அணி தற்போது கிட்டதட்ட 24 வருடங்கள் கழித்து மீண்டும் பாகிஸ்தானுக்குச் சுற்றுப்பயணம் செல்வதால் இந்தத் தொடர் குறித்து எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.