இந்தியாவில் வரும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொள்கின்றன. உலகக்கோப்பை தொடரின் தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் அகமதாபாத்தில் மோத உள்ளன.
Advertisement
இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை சென்னையில் சந்திக்கிறது. இந்நிலையில் உலகக்கோப்பையில் பங்கேற்க உள்ள ஆஸ்திரேலிய அணி புதிய ஜெர்சியை அறிமுகப்படுத்தி உள்ளது.
Advertisement
இதனை ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் அதிகாரப்பூர்வ சமூக வலைதளத்தில் ஆல் ரவுண்டர் மேக்ஸ்வெல் புதிய ஜெர்சியை அணிந்திருந்த புகைப்படத்தை பதிவிட்டு அறிமுகப்படுத்தி உள்ளது. இந்நிலையில் இப்புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.