ஆஸ்திரேலியா vs இங்கிலாந்து, முதல் ஒருநாள் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!

Updated: Wed, Nov 16 2022 22:36 IST
Australia vs England, 1st ODI – AUS vs ENG Cricket Match Prediction, Where To Watch, Probable XI And (Image Source: Google)

ஐசிசியின் எட்டாவது டி20 உலகக்கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. இதில் கடந்தாண்டு சாம்பியனான ஆஸ்திரேலிய அணி லீக் சுற்றுகளோடு வெளியேறியது. அதேசமயம் ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளது. 

இந்நிலையில் இங்கிலாந்து அணி தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் அடிலெய்டில் உள்ள ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நாளை நடைபெறுகிறது. 

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - ஆஸ்திரேலியா vs இங்கிலாந்து
  • இடம் - அடிலெய்ட் ஓவல், அடிலெய்ட்
  • நேரம் - மதியம் 1.50 மணி(இந்திய நேரப்படி)

போட்டி முன்னோட்டம்

ஆஸ்திரேலிய அணியின் ஒருநாள் கேப்டனாக இருந்த ஆரோன் ஃபிஞ்ச், ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்ததையடுத்து, டெஸ்ட் அணியின் கேப்டனாக இருந்த பாட் கம்மின்ஸ் தற்போது ஒருநாள் அணியின் கேப்டனாகவும் அறிவிக்கப்பட்டுள்ளார். அவரது தலைமையில் ஆஸ்திரேலிய அணி முதல் ஒருநாள் போட்டியில் பங்கேற்கவுள்ளதால் அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

ஆஸ்திரேலிய அணியைப் பொறுத்தமட்டில் டேவிட் வார்னர், கமரூன் க்ரீன், மார்னஸ் லபுசாக்னே, ஸ்டீவ் ஸ்மித், மார்கஸ் ஸ்டோய்னிஸ், டிராவிஸ் ஹெட், அலெக்ஸ் கேரி ஆகியோர் பேட்டிங்கிலும், பந்துவீச்சில் மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஸாம்பா, ஜோஷ் ஹசில்வுட், ஆஷ்டன் அகர் ஆகியோரையும் கொண்டுள்ளதால் நிச்சயம் எதிரணிக்கு கடும் நெருக்கடி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் கிளென் மேக்ஸ்வெல் காயம் காரணமாக தொடரிலிருந்து விலகியுள்ளது அந்த அணிக்கு சற்று பின்னடவை ஏற்படுத்தியுள்ளது.

மறுபுறம் ஜோஷ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி ஆஸ்திரேலிய மண்ணில் தங்களது இரண்டாவது டி20 உலகக்கோப்பையை கைப்பற்றிய உத்வேகம் மற்றும் உற்ச்சாகத்துடன் இத்தொடரை சந்திக்கவுள்ளது.

ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியின் பேட்டிங்கைப் பொறுத்தமட்டில் ஜேசன் ராய், பென் ஸ்டோக்ஸ், பில் சால்ட், ஜேம்ஸ் வின்ஸ், சாம் பில்லிங்ஸ், மொயின் அலி ஆகியோரும் பந்துவீச்சில் சாம் கரண், கிறிஸ் வோக்ஸ், ஆதில் ரஷித் ஆகியோரும் இடம்பிடித்திருப்பது அணியின் வலிமையை அதிகரித்துள்ளது.

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 152
  • ஆஸ்திரேலியா - 84
  • இங்கிலாந்து - 63
  • முடிவில்லை - 05

உத்தேச அணி

ஆஸ்திரேலியா: டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித், கேமரூன் கிரீன், மார்கஸ் ஸ்டோனிஸ், மிட்செல் மார்ஷ், மார்னஸ் லாபுசாக்னே, டிராவிஸ் ஹெட், ஜோஷ் ஹேசில்வுட், மிட்செல் ஸ்டார்க், பாட் கம்மின்ஸ் (கே), ஆடம் ஸாம்பா.

இங்கிலாந்து: ஜேசன் ராய், பில் சால்ட், ஜேம்ஸ் வின்ஸ், சாம் பில்லிங்ஸ், ஜோஸ் பட்லர் (கே), மொயின் அலி, சாம் கர்ரன், கிறிஸ் வோக்ஸ், ஆலி ஸ்டோன், அடில் ரஷித், லூக் வூட்/டேவிட் வில்லி.

ஃபேண்டஸி லெவன்

  • விக்கெட் கீப்பர்கள் - அலெக்ஸ் கேரி, ஜோஸ் பட்லர்
  • பேட்டர்கள் - ஜேசன் ராய், டிராவிஸ் ஹெட், டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித்
  • ஆல் ரவுண்டர்கள் - மிட்செல் மார்ஷ், மார்கஸ் ஸ்டோய்னிஸ்
  • பந்துவீச்சாளர்கள் - லுக் வுட், ஜோஷ் ஹசில்வுட், ஆதில் ரஷித்
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை