ஆஸ்திரேலியா vs இங்கிலாந்து, இரண்டாவது ஒருநாள் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!

Updated: Fri, Nov 18 2022 22:40 IST
Image Source: Google

இங்கிலாந்து அணி தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றிபெற்று அசத்தியது.

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியிலும் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்றால் தொடரை வென்றுவிடும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - ஆஸ்திரேலியா vs இங்கிலாந்து
  • இடம் - சிட்னி கிரிக்கெட் மைதானம்
  • நேரம் - காலை 8.50 மணி

போட்டி முன்னோட்டம்

ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி முதல் ஒருநாள் போட்டியில் பேட்டிங்கில் கடுமையாக சொதப்பியது. அந்த அணியில் டேவிட் மாலன் ஒற்றையாளாக சதமடித்து ஸ்கோரை உயர்த்திய போதிலும், மற்றவர்கள் பேட்டிங்கில் சொதப்பியதால் போதிய இலக்கை அந்த அணியால் நிர்ணயிக்க முடியவில்லை.

அதனால் அணியிலுள்ள ஜேசன் ராய், பிலிப் சால்ட், ஜேம்ஸ் வின்ஸ், சாம் பில்லிங்ஸ் ஆகியோர் பேட்டிங்கில் சோபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். பந்துவீச்சை பொறுத்தமட்டில் டேவிட் வில்லி, கிறிஸ் ஜோர்டன் ஆகியோருடன் லுக் வுட், ஒல்லி ஸ்டோன் ஆகியோரும் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் நிச்சயம் இப்போட்டியில் இங்கிலாந்து வெற்றிபெறும்.

அதேசமயம் பாட் கம்மின்ஸ் தலைமையில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி முதல் ஒருநாள் போட்டியிலேயே ஆபார வெற்றிபெற்று தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது. இதற்கு முக்கிய காரணம் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர், டிராவிஸ் ஹெட் ஆகியோரின் அபாரமான பேட்டிங் தான்.

நீண்ட நாள்களுக்கு பிறகு வார்னர் மற்றும் ஸ்மித்திடமிருந்து சிறப்பான ஆட்டத்தை எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு இப்போட்டி விருந்தாக அமைந்திருந்தது. இதேபோல் அவர்கள் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் பட்சத்தில் அந்த அணியின் வெற்றியைத் தடுப்படும் பெரும் சவாலாக அமையும்.

பந்துவீச்சை பொறுத்தவரையில் கேப்டன் பாட் கம்மின்ஸ், ஆடாம் ஸாம்பா ஆகியோர் சிறப்பாக செயல்பட்டனர். அவர்களுக்கு துணையாக மிட்செல் ஸ்டார்க், ஆஷ்டன் அகர், மார்கஸ் ஸ்டொய்னிஸும் இருப்பது அந்த அணிக்கும் பெரும் பலமாக பார்க்கப்படுகிறது. 

மேலும் நாளைய போட்டியில் வெற்றிபெற்றால் மட்டுமே இங்கிலாந்து அணியால் தொடரை தக்கவைக்க முடியும் என்பதால் இப்போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது.

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 153
  • ஆஸ்திரேலியா - 85
  • இங்கிலாந்து - 63
  • முடிவில்லை - 05

உத்தேச அணி

ஆஸ்திரேலியா: டேவிட் வார்னர், டிராவிஸ் ஹெட், ஸ்டீவ் ஸ்மித், மார்னஸ் லாபுசாக்னே, அலெக்ஸ் கேரி, மார்கஸ் ஸ்டோய்னிஸ், கேமரூன் கிரீன், ஆஷ்டன் அகர், பாட் கம்மின்ஸ் (கே), மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஸாம்பா.

இங்கிலாந்து: ஜேசன் ராய், பிலிப் சால்ட், டேவிட் மாலன், ஜேம்ஸ் வின்ஸ், சாம் பில்லிங்ஸ், ஜோஸ் பட்லர் (கே), லியாம் டாசன், கிறிஸ் ஜோர்டான், டேவிட் வில்லி, லூக் வூட், ஒல்லி ஸ்டோன்.

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை