Australia vs England, 3rd Test: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நடப்பாண்டு ஆஷஸ் டெஸ்ட் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நடைபெற்று முடிந்துள்ள முதலிரு போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றியைப் பதிவுசெய்துள்ளது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி பாக்ஸிங் டே டெஸ்டாக நாளை மெல்போர்னில் நடைபெறவுள்ளது. மேலும் இப்போட்டியிலும் இங்கிலாந்து அணி தோல்வியடைந்தால் தொடரை இலக்கும் என்பதால், இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - ஆஸ்திரேலியா - இங்கிலாந்து.
- இடம் - மெல்போர்ன் கிரிக்கெட் மைதானம்
- நேரம் - அதிகாலை 5 மணி (இந்திய நேரப்படி)
போட்டி முன்னோட்டம்
பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி முதலிரு டெஸ்ட் போட்டிகளிலும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி கண்டுள்ளது.
அதிலும் கடந்த போட்டியில் கம்மின்ஸ், ஹசில்வுட் ஆகியோர் இல்லாமல் மைக்கேல் நேசர், ஜெய் ரிச்சர்ட்சனை கொண்டு ஆஸ்திரேலிய அணி இந்த வெற்றியைப் பெற்றுள்ளது.
மேலும் டேவிட் வார்னர், லபுசாக்னே, ஸ்டீவ் ஸ்மித் என பேட்டிங்கில் அசத்தி வருவதால் அணியின் வெற்றி வாய்ப்பும் அதிகரித்துள்ளது.
ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து அணி கடந்த இரண்டு போட்டிகளிலும் பேட்டிங் பவுலிங் என சொதப்பியது. இதனை கேப்டன் ஜோ ரூட்டே பத்திரிக்கையாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார்.
அதனையும் கடந்து இங்கிலாந்து அணி இப்போட்டியில் வெற்றிபெற்றாக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. மேலும் ஜோ ரூட், டேவிட் மாலன் ஆகியோரை கடந்து மற்ற வீரர்களும் சிறப்பாக செயல்பட்டால் இங்கிலாந்து அணி தொடரில் நீடிக்க வாய்ப்பு கிடைக்கும்.
நேருக்கு நேர்
- மோதிய போட்டிகள் - 353
- ஆஸ்திரேலியா வெற்றி-148
- இங்கிலாந்து வெற்றி - 110
- முடிவில்லை - 95
உத்தேச அணி
ஆஸ்திரேலியா - டேவிட் வார்னர், மார்கஸ் ஹாரிஸ், மார்னஸ் லாபுசாக்னே, ஸ்டீவன் ஸ்மித், டிராவிஸ் ஹெட், கேமரூன் கிரீன், அலெக்ஸ் கேரி, பாட் கம்மின்ஸ்(கே), மிட்செல் ஸ்டார்க், ஜெய் ரிச்சர்ட்சன், நாதன் லயன்.
இங்கிலாந்து - ரோரி பர்ன்ஸ்/ ஜாக் க்ரௌலி, ஹசீப் ஹமீத், டேவிட் மாலன், ஜோ ரூட் (கே), பென் ஸ்டோக்ஸ், ஒல்லி போப்/ ஜானி பேர்ஸ்டோவ், ஜோஸ் பட்லர், கிறிஸ் வோக்ஸ், ஒல்லி ராபின்சன், ஸ்டூவர்ட் பிராட், ஜேம்ஸ் ஆண்டர்சன்/ ஜாக் லீச்
ஃபேண்டஸி லெவன்
- விக்கெட் கீப்பர்கள் - அலெக்ஸ் கேரி
- பேட்ஸ்மேன்கள் - டேவிட் மலான், ஸ்டீவன் ஸ்மித், டேவிட் வார்னர், மார்னஸ் லாபுசாக்னே
- ஆல்-ரவுண்டர்கள் - ஜோ ரூட்,
- பந்துவீச்சாளர்கள் - ஸ்டூவர்ட் பிராட், ஒல்லி ராபின்சன், பாட் கம்மின்ஸ், நாதன் லயன், மிட்செல் ஸ்டார்க்.