Australia vs England, 4th Test - போட்டி முன்னோட்டம் & ஃபெண்டஸி டிப்ஸ்!

Updated: Tue, Jan 04 2022 14:12 IST
Image Source: Google

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நடப்பாண்டு ஆஷஸ் டெஸ்ட் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நடைபெற்று முடிந்துள்ள மூன்று போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றியைப் பதிவுசெய்து தொடரைக் கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான 4ஆவது டெஸ்ட் போட்டி சிட்னி மைதானத்தில் நாளை தொடங்குகிறது. ஏற்கெனவே இங்கிலாந்து அணி மூன்று போட்டிகளிலும் தோல்வியடைந்து தொடரை இழந்துள்ளதால் இப்போட்டியில் கட்டாயம் வெற்றிபெற்றாக வேண்டும் என்ற எண்ணத்தில் களமிறங்கவுள்ளது.

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - ஆஸ்திரேலியா - இங்கிலாந்து. 
  • இடம் - சிட்னி கிரிக்கெட் மைதானம்
  • நேரம் - அதிகாலை 5 மணி (இந்திய நேரப்படி)

போட்டி முன்னோட்டம்

பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி இந்த டெஸ்ட் தொடரில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி கண்டுள்ளது. டேவிட் வார்னர், லபுசாக்னே, ஸ்டீவ் ஸ்மித் என பேட்டிங்கில் அசத்தி வருவதால் அணியின் வெற்றி வாய்ப்பும் அதிகரித்துள்ளது. 

பந்துவீச்சில் பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், நாதன் லயன் இருப்பது அணிக்கு கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது. மேலும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள ட்ராவிஸ் ஹெட்டிற்கு பதிலாக உஸ்மான் கவாஜா அணியில் சேர்த்திருப்பதும் பலமாக பார்க்கப்படுகிறது.

ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து அணி கடந்த மூன்று போட்டிகளிலும் பேட்டிங் பவுலிங் என சொதப்பியது. அதனையும் கடந்து இங்கிலாந்து அணி இப்போட்டியில் வெற்றிபெற்றாக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

 மேலும் ஜோ ரூட், டேவிட் மாலன் ஆகியோரை கடந்து மற்ற வீரர்களும் சிறப்பாக செயல்பட்டால் இங்கிலாந்து அணி தொடரில் நீடிக்க வாய்ப்பு கிடைக்கும்.

அதேபோல் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஒல்லி ராபின்சன் காயம் காரணமாக இப்போட்டியிலிருந்து விலகியது இங்கிலாந்துக்கு பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

ஆனாலும் அவருக்கு மாற்று வீரராக அணியில் இணைந்துள்ள ஸ்டூவர்ட் பிராட் தனது பங்களிப்பை வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 354
  • ஆஸ்திரேலியா வெற்றி-149
  • இங்கிலாந்து வெற்றி - 110
  • முடிவில்லை - 95

பிளேயிங் லெவன்

ஆஸ்திரேலியா - டேவிட் வார்னர், மார்கஸ் ஹாரிஸ், மார்னஸ் லாபுசாக்னே, ஸ்டீவன் ஸ்மித், உஸ்மான் கவாஜா, கேமரூன் கிரீன், அலெக்ஸ் கேரி, பாட் கம்மின்ஸ்(கே), மிட்செல் ஸ்டார்க், ஸ்காட் போலண்ட், நாதன் லயன்.

இங்கிலாந்து - ஜாக் க்ரௌலி, ஹசீப் ஹமீத், டேவிட் மாலன், ஜோ ரூட் (கே), பென் ஸ்டோக்ஸ், ஜானி பேர்ஸ்டோவ், ஜோஸ் பட்லர், மார்க் வுட், ஸ்டூவர்ட் பிராட், ஜேம்ஸ் ஆண்டர்சன், ஜாக் லீச்.

ஃபேண்டஸி லெவன்

  • விக்கெட் கீப்பர்கள் - ஜோஸ் பட்லர்
  • பேட்ஸ்மேன்கள் - டேவிட் மலான், ஸ்டீவன் ஸ்மித், டேவிட் வார்னர், மார்னஸ் லாபுசாக்னே
  • ஆல்-ரவுண்டர்கள் - ஜோ ரூட், கேமரூன் கிரீன்
  • பந்துவீச்சாளர்கள் - ஸ்டூவர்ட் பிராட், ஜேம்ஸ் ஆண்டர்சன், பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க்.
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை