ஆஸ்திரேலியா vs நியூசிலாந்து, டி20 உலகக்கோப்பை - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!

Updated: Fri, Oct 21 2022 21:53 IST
Image Source: Google

டி20 உலக கோப்பை தொடரின் தகுதிப்போட்டிகள் இன்றுடன் முடிந்த நிலையில், நாளை முதல் சூப்பர் 12 சுற்று போட்டிகள் நடக்கவுள்ளன. தகுதிச்சுற்றில் க்ரூப் ஏ-விலிருந்து இலங்கை மற்றும் நெதர்லாந்து அணிகளும், க்ரூப் பி-யிலிருந்து ஜிம்பாப்வே மற்றும் அயர்லாந்து அணிகளும் சூப்பர் 12 சுற்றுக்கு தகுதிபெற்றன.

நாளை முதல் சூப்பர் 12 சுற்று போட்டிகள் தொடங்கும் நிலையில், சூப்பர் 12 சுற்றின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவும், கடந்து இறுதிப்போட்டியில் பங்கேற்ற நியூசிலாந்தும் மோதுகின்றன. இரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டி சிட்னியில் நடைபெறுகிறது. 

இதில் போட்டியை நடத்தும் ஆஸ்திரேலியா அணி ஆரோன் ஃபிஞ்ச் தலைமையில் களமிறங்குகிறது. சமீப காலங்களில் ஆஸ்திரேலிய அணி பல அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி டி20 கிரிக்கெட்டில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து வருகிறது. 

அதற்கேற்றது போல் டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், கிளென் மேக்ஸ்வெல், மேத்யூ வேட், மார்கஸ் ஸ்டோய்னிஸ் ஆகியோர் பேட்டிங்கிலும், மிட்செல் மார்ஷ், ஜோஷ் ஹசில்வுட், ஆடம் ஸாம்பா, பாட் கம்மின்ஸ் ஆகியோர் பந்துவீச்சிலும் அசத்தி வருவது அணிக்கான பலத்தை கூட்டியுள்ளது. 

அதேசமயம் கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி சமீப காலங்களில் சரிவர செயல்படவில்லை என்றாலும் ஐசிசி தொடர் என்று வந்தால் அந்த அணி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தியுள்ளது. 

அந்த அணியின் பேட்டிங்கைப் பொறுத்தவரையில் மார்ட்டின் கப்தில், ஃபின் ஆலன், டெவான் கான்வே, கிளென் பிலீப்ஸ், மார்க் சாப்மேன் ஆகியோரும் பந்துவீச்சில் ட்ரெண்ட் போல்ட், டிம் சௌதி, இஷ் சோதி, மிட்செல் சாண்ட்னர் ஆகியோர் இருப்பது அணிக்கு பலமாக பார்க்கப்படுகிறது.

போட்டி தகவல்கள் 

  • மோதும் அணிகள் - ஆஸ்திரேலியா vs நியூசிலாந்து
  • இடம் - சிட்னி கிரிக்கெட் மைதானம், சிட்னி
  • நேரம் - மதியம் 12.30 மணி (இந்திய நேரப்படி)

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 15
  • ஆஸ்திரேலியா - 10
  • நியூசிலாந்து - 04
  • முடிவில்லை - 01

உத்தேச லெவன்

ஆஸ்திரேலியா: ஆரோன் பிஞ்ச் (கே), டேவிட் வார்னர், டிம் டேவிட், ஜோஷ் ஹேசில்வுட், மிட்செல் மார்ஷ், கிளென் மேக்ஸ்வெல், மிட்செல் ஸ்டார்க், மார்கஸ் ஸ்டோனிஸ், மேத்யூ வேட், ஆடம் ஸாம்பா, பாட் கம்மின்ஸ்.

நியூசிலாந்து: ஃபின் ஆலன், மார்ட்டின் கப்தில்,டெவன் கான்வே, கேன் வில்லியம்சன், கிளென் பிலிப்ஸ், ஜேம்ஸ் நீஷம், மைக்கேல் பிரேஸ்வெல், மிட்செல் சான்ட்னர், இஷ் சோதி, டிம் சவுத்தி, டிரென்ட் போல்ட்.

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர்: ஃபின் ஆலன், மேத்யூ வேட்
  • பேட்டிங்: டேவிட் வார்னர், டெவோன் கான்வே, டிம் டேவிட்
  • ஆல்-ரவுண்டர்: மைக்கேல் பிரேஸ்வெல், மிட்செல் மார்ஷ்
  • பந்துவீச்சு: ஜோஷ் ஹேசில்வுட், டிரென்ட் போல்ட், இஷ் சோதி, ஆடம் ஜம்பா
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை