ஆஸ்திரேலியா vs தென் ஆப்பிரிக்கா, மூன்றாவது டெஸ்ட் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!

Updated: Mon, Jan 02 2023 22:03 IST
Image Source: Google

டீன் எல்கர் தலைமையிலான தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இத்தொடரில் இதுவரை நடந்து முடிந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் தென் ஆப்பிரிக்க அணி தோல்வியைத் தழுவியதுடன் தொடரையும் இழந்துள்ளது.

இந்த நிலையில் ஆஸ்திரேலியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான 3ஆவது டெஸ்ட் போட்டி சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியிலும் தென் ஆப்பிரிக்க அணி தோல்வியடையும் பட்சத்தில் ஒயிட்வாஷ் ஆகும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

போட்டி தகவல்கள்

  • மோதும் ஆணிகள் - ஆஸ்திரேலியா vs தென் ஆப்பிரிக்கா
  • இடம் - சிட்னி கிரிக்கெட் மைதானம், சிட்னி
  • நேரம் - அதிகாலை 5.30 மணி

போட்டி முன்னோட்டம்

பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி ஏற்கெனவே இத்தொடரின் முதலிரண்டு போட்டிகளில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இந்நிலையில் இந்த மூன்றாவது போட்டி சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுவதால் இப்போட்டியிலும் வேகப்பந்துவீச்சுக்கு சாதகம் அதிகம் எனறே கூறப்படுகிறது. 

அதற்கேற்ப ஆஸ்திரேலிய அணியும் இப்போட்டிக்கான பிளேயிங் லெவனில் ஜோஷ் ஹசில்வுட், ஸ்காட் போலாண்ட் ஆகியோரைத் தேர்வுசெய்துள்ளது. இருப்பினும் இந்த அணியில் ஸ்டார்க், கேமரூன் க்ரீன் இல்லாதது அணிக்கு சற்று பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.

பேட்டிங்கைப் பொறுத்தவரையில் தொடக்க வீரர் டேவிட் வார்னர் கடந்து போட்டியில் இரட்டை சதம் விளாசி அசத்தினார். அவருக்கு துணையாக மார்னஸ் லபுசாக்னே, ஸ்டீவ் ஸ்மித், அலெக்ஸ் கேரி ஆகியோரும் அணியில் இருப்பது பலமாக பார்க்கப்படுகிறது. இவர்கள் சிறப்பக செயல்படும் பட்சத்தில் இப்போட்டியை ஆஸ்திரேலிய அணி வெல்லும் என்று கணிக்கப்படுகிறது.

மறுபக்கம் டீன் எல்கர் தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணி முதலிரண்டு போட்டிகளிலும் தோல்வியைத் தழுவி தொடரை இழந்துள்ளது. இதனால் கடைசி டெஸ்ட் போட்டியிலாவது வெற்றிபெற்று ஆறுதலை தேடும் முனைப்பில் உள்ளது. இதனால் அவர்கள் இப்போட்டியில் வெல்லும் முனைப்பில் களமிறங்குவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும் இப்போட்டியில் தோல்வியடைந்தால் ஒயிட்வாஷ் ஆகும் என்பதால் நிச்சயம் அந்த அணி இப்போட்டியில் பதிலடி கொடுக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. அந்த அணியின் பேட்டிங்கில் எல்கர், சரெல் எர்வி, டெம்பா பவுமா, வெண்டர் டுசென் ஆகியோரும் பந்துவீச்சில் ரபாடா, நோர்ட்ஜே, இங்கிடி, கோட்ஸி,ஜான்சென் ஆகியோருடன் கேசவ் மகாராஜும் இருப்பது அணிக்கு பெரும் பலமாக பார்க்கப்படுகிறது.

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 100
  • ஆஸ்திரேலியா - 54
  • தென் ஆப்பிரிக்கா - 26
  • முடிவில்லை - 20

உத்தேச லெவன்

ஆஸ்திரேலியா - டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லாபுஷாக்னே, ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட், மேத்யூ ரென்ஷா, அலெக்ஸ் கேரி, பாட் கம்மின்ஸ் (கே), ஸ்காட் போலண்ட், ஜோஷ் ஹேசில்வுட், நாதன் லையான்.

தென் ஆப்பிரிக்கா - டீன் எல்கர் (கே), சரேல் எர்வீ, ரஸ்ஸி வான் டெர் டுசென்/ஹெய்ன்ரிச் கிளாசென், டெம்பா பவுமா, கயா சோண்டோ, கைல் வெர்ரைன், மார்கோ ஜான்சன், கேசவ் மகராஜ், ககிசோ ரபாடா, அன்ரிச் நோர்ட்ஜே, லுங்கி இங்கிடி.

ஃபேண்டஸி லெவன்

  • விக்கெட் கீப்பர்கள் - கைல் வெர்ரைன், அலெக்ஸ் கேரி
  • பேட்டர்ஸ் - ஸ்டீவன் ஸ்மித், டேவிட் வார்னர், டெம்பா பவுமா
  • ஆல்-ரவுண்டர்கள் - டிராவிஸ் ஹெட், மார்கோ ஜான்சன்
  • பந்துவீச்சாளர்கள் - பாட் கம்மின்ஸ், ககிசோ ரபாடா, நாதன் லியான், அன்ரிச் நோர்ட்ஜே
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை