IND vs AUS: அடுத்தடுத்து விலகிய வீரர்கள்; கடும் நெருக்கடியில் ஆஸி.!

Updated: Sun, Feb 05 2023 11:22 IST
Australia Will Miss The Service Of Josh Hazlewood In The First Two Tests! (Image Source: Google)

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் பங்கேற்கும் 4 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர் வரும் 9ஆம் தேதி தொடங்கி நடைபெறவுள்ளது. பிப்ரவரி 9-13, 17-21 மற்றும் மார்ச் 1-5, 9-13 ஆகிய தேதிகளில் போட்டிகள் நடைபெறவுள்ளன. இதற்கான ஆஸ்திரேலிய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. கேப்டனாக வழக்கம்போல் பாட் கம்மின்ஸ் இடம்பெற்றுள்ளார். காயம் காரணமாக அவதிப்பட்டு வரும் மிட்செல் ஸ்டார்க்கிற்கு அணியில் இடம் வழங்கப்பட்டுள்ளது. 

இவர் முதல் டெஸ்ட் போட்டியில் மட்டும் பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது, இந்த 4 டெஸ்ட் போட்டிகளில், முதல் இரண்டு டெஸ்ட்களில் இடம்பிடிக்கும் இந்திய வீரர்கள் பட்டியலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன் இருவரும் அறிமுக வீரர்களாக இடம்பெற்றுள்ளனர்.

இத்தொடரில் இந்திய அணி 3-0 அல்லது 3-1 என்ற கணக்கில் வென்றாக வேண்டும். கடந்த இரண்டுமுறை ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய அணி டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியதால், இம்முறை இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றி பதிலடி கொடுக்க ஆஸ்திரேலிய அணி கடுமையாக போராடும் எனக் கருதப்படுகிறது. இத்தொடரில் இந்திய அணி இரண்டு வெற்றிகளை பெறும் பட்சத்தில், மூன்றுவிதமான தரவரிசையிலும் நம்பர் 1 இடத்தை பிடித்துவிடும். இதனால், இத்தொடர் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், விரல் வலி காரணமாக ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் கேமரூன் கிரீன் முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து விலகியுள்ளார். இது நிச்சயம் ஆஸ்திரேலிய அணிக்கு பின்னடைவான விஷயம்தான். கேமரூன் கிரீன் மொத்தம் 18 டெஸ்ட்களில் 6 அரை சதங்கள் உட்பட 806 ரன்களை குவித்துள்ளார். மேலும், 23 விக்கெட்களையும் சாய்த்து முரட்டு பார்மில் இருக்கிறார். இவர் இடம்பெற்றால் ஒரு பௌலரை குறைத்துவிட்டு, கூடுதலாக ஒரு பேட்ஸ்மேனை சேர்த்திருக்க முடியும். இவர் இல்லாததால், தற்போது ஆஸ்திரேலிய பிளேயிங் லெவனில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், இடது காலில் ஏற்பட்ட காயம் காரணமாக, ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாள் ஜோஷ் ஹசில்வுட் முதல் இரண்டு போட்டிகளில் இருந்து விலக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் மிகவும் உயரமான பௌலர் என்பதால், இந்திய மண்ணில் சிறப்பாக பவுன்சர் பந்துகளை வீச முடியும். இவரும் முதல் இரண்டு போட்டிகளில் இருந்து விலக உள்ளதால், ஆஸ்திரேலிய அணிக்கு தற்போதே கடும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை