ஆஸ்திரேலியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி கான்பெர்ராவில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய இலங்கை அணி ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இதனால் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 121 ரன்களைச் சேர்த்தது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் கேன் ரிச்சர்ட்சன் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதையடுத்து இலக்கை துரத்திய ஆஸ்திரேலிய அணியில் பென் மெக்டர்மோட் முதல் பந்திலேயே ஆட்டமிழந்து வெளியேறி அதிர்ச்சியளித்து. அடுத்து ஆஷ்டன் அகார் 13 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
அதன்பின் ஜோடி சேர்ந்த ஆரோன் ஃபிஞ்ச் - கிளென் மேக்ஸ்வெல் அதிரடியாக விளையாடி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.
இதன்மூலம் 16.5 ஓவர்களில் இலக்கை எட்டி 6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை ஆஸ்திரேலிய அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தினார்.