தமிழ் பெண்ணை மணம்முடிக்கும் மேக்ஸ்வெல்!

Updated: Sat, Feb 12 2022 22:28 IST
Image Source: Google

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் கிளென் மேக்ஸ்வெல். அதிரடி பேட்டிங், அருமையான ஸ்பின் பவுலிங் என சிறந்த ஆல்ரவுண்டராக திகழும் மேக்ஸ்வெல், ஆஸ்திரேலிய அணியின் மேட்ச் வின்னர். 

ஐபிஎல்லில் ஆர்சிபி அணிக்காக ஆடும் கிளென் மேக்ஸ்வெல், கடந்த சீசனில் அபாரமாக விளையாடியதையடுத்து, அவரை ரூ.11 கோடிக்கு தக்கவைத்தது ஆர்சிபி அணி.

சமகாலத்தின் அதிரடி பேட்ஸ்மேன்களில் ஒருவரான கிளென் மேக்ஸ்வெல், தமிழத்தை சேர்ந்த ஆஸ்திரேலியாவில் வளர்ந்த வினி ராமன் என்ற பெண்ணை காதலித்துவந்த நிலையில், இவர்களுக்கு இந்திய முறைப்படி 2020ஆம் ஆண்டு நிச்சயதார்த்தம் நடந்தது. 

அதன்பின்னர் கரோனா அச்சுறுத்தல், லாக்டவுன் என நெருக்கடியான நிலை தொடர்ந்ததால் திருமணம் செய்யாமல் இருந்தனர். இந்நிலையில், அவர்கள் இருவருக்கும் திருமணம் முடிவாகியுள்ளது. வரும் மார்ச் 27ஆம் தேதி மேக்ஸ்வெல் - வினி ராமன் திருமணம் நடக்கவுள்ளது. 

மேலும் இவர்களது திருமண அழைப்பிதழ் இணையத்தில் செம வைரலாகிவருகிறது. அதைக்கண்ட ரசிகர்கள், மேக்ஸ்வெல் - வினி ராமன் ஜோடிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துவருகிறார்கள்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை