காயத்தில் இருந்து மீண்ட ஆவேஷ் கான்; வலிமை பெறும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்!
18ஆவது சீசன் ஐபிஎல் தொடரானது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், ரிஷப் பந்த் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி மட்டும் பெரும் பின்னடைவை சந்தித்திருந்தது. ஏனெனில் அந்த அணியின் நட்சத்திர வீரர்கள் சிலர் தொடரில் பங்கேற்பது பெரும் சிக்கலாக மாறியுள்ளது.
ஏனெனில் அந்த அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர்கள் மயங்க் யாதவ் காயம் காரணமாக முதல் பாதி ஐபிஎல் தொடரையும், ஆவேஷ் கான் சில போட்டிகளையும், மொஹ்சின் கான் நடப்பு தொடரில் இருந்து வெளியேறியும் உள்ளனர். இதில் மொஹ்சின் கானுக்கு பதிலாக இந்திய அணியின் அனுபவம் வாய்ந்த வேகப்பந்து வீச்சாளர் ஷர்தூல் தாக்கூரை அந்த அணி மற்று வீரராக ஒப்பந்தம் செய்துள்ளது.
ஆனாலும் அந்த அணியின் பந்துவீச்சு பெரிதளவில் கைக்கொடுக்காததன் காரணமாக டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான முதல் போட்டியில் அந்த அணி கடைசி வரை போராடியும் தோல்வியைத் தழுவியுள்ளது. இதனால் எதிர்வரும் போட்டிகளில் அந்த அணி எவ்வாறு செயல்படும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் அந்த அணிக்கு கூடுதல் மகிழ்ச்சியளிக்கும் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.
அதன்படி காயம் காரணமாக தேசிய கிரிக்கெட் அகாடாமியில் சிகிச்சை பெற்று வந்த ஆவேஷ் கான் தற்சமயம் முழு உடற்தகுதியை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அவர் தனது காயத்தில் இருந்து குணமடைந்ததன் காரணமாக பிசிசிஐ மருத்துவ குழுவும் அவர் ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்கான அனுமதியை வழங்கியுள்ளதாக தகவல்கல் தெரிவிக்கின்றன. இதனால் கூடிய விரைவில் அவர் லக்னோ அணியில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக கடந்த நவம்வர் மாதம் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரின் போது இந்திய அணிக்காக விளையாடிய அவர், அதன்பின் காயத்தை சந்தித்து எந்தவொரு போட்டிகளிலும் விளையாடாமல் இருந்தார். அதேசமயம் ஐபிஎல் வீரர்கள் ஏலத்தில் பங்கேற்ற ஆவேஷ் கானை ரூ.9.75 கோடிக்கும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி ஏலத்தில் எடுத்திருந்தது. இதனால் இந்த ஐபிஎல் தொடரில் இவரின் செயல்பாடுகள் குறித்த எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.
Also Read: Funding To Save Test Cricket
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்: நிக்கோலஸ் பூரன், ரவி பிஷ்னோய், மயங்க் யாதவ், ஷர்தூல் தாக்கூர், ஆயுஷ் பதோனி, ரிஷப் பந்த் (கேப்டன்), டேவிட் மில்லர், ஐடன் மார்க்ரம், மிட்செல் மார்ஷ், அவேஷ் கான், அப்துல் சமத், ஆர்யன் ஜூயல், ஆகாஷ் தீப், ஹிம்மத் சிங், சித்தார்த், திக்வேஷ் சிங், ஷாபாஸ் அகமது, ஆகாஷ் சிங், ஷமர் ஜோசப், பிரின்ஸ் யாதவ், யுவராஜ் சவுத்ரி, ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், அர்ஷின் குல்கர்னி, மேத்யூ பிரீட்ஸ்கே