ஆசிய கோப்பை தொடரிலிருந்து விலகினார் ஆவேஷ் கான்!

Updated: Wed, Sep 07 2022 00:00 IST
Avesh Khan out of remainder of Asia Cup, Deepak Chahar drafted in (Image Source: Google)

ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த ஆகஸ்ட் 27ஆம் தேதி தோடங்கிய 15ஆஆவது ஆசிய கோப்பை தொடரானது தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மொத்தம் ஆறு அணிகள் பங்கேற்ற இந்த தொடரானது தற்போது “சூப்பர் 4” சுற்றில் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்த ஆசிய கோப்பை தொடரின் லீக் ஆட்டங்களில் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது “சூப்பர் 4” சுற்றின் முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக தோல்வியை சந்தித்தது.

இந்நிலையில் இன்று நடைபெற்ற இலங்கை அணிக்கெதிரான போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது மட்டுமின்றி அசிய கோப்பை தொடரின் இறுதிப்போட்டிக்கான வாய்ப்பையும் ஏறத்தாழ இழந்துவிட்டது. 

இந்த ஆசியக் கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்படும்போது பும்ரா மற்றும் ஹர்ஷல் பட்டேல் ஆகியோர் காயம் காரணமாக அணியில் தேர்வு செய்யப்படாமல் விடப்பட்டனர். அவர்களை தொடர்ந்து கடந்த சில போட்டிகளுக்கு முன்னர் ஏற்பட்ட காயம் காரணமாக ரவிந்திர ஜடேஜா ஆசிய கோப்பை தொடரிலிருந்து வெளியேறினார். 

இந்நிலையில் ரவீந்திர ஜடேஜாவை தொடர்ந்து மற்றும் ஒரு வீரராக வேகப்பந்து வீச்சாளரான ஆவேஷ் கான் ஆசிய கோப்பை தொடரின் எஞ்சியுள்ள ஆட்டங்களிலிருந்து வெளியேறி உள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

அதன்படி கடந்த சில நாட்களாகவே கடுமையான ஜுரம் மற்றும் சளி ஆகியவற்றால் பாதிக்கப்பட்டிருந்த ஆவேஷ் கானுக்கு இன்னும் உடல்நிலை சரியாகாத காரணத்தினால் எஞ்சியுள்ள போட்டிகளில் இருந்து அவர் வெளியேறுகிறார் என இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பிசிசிஐ அதிகாரபூர்வ அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

ஏற்கனவே பந்துவீச்சில் இந்த ஆசிய கோப்பை தொடரில் ரன்களை வாரி வழங்கி வந்த அவரை அணியிலிருந்து வெளியேற்றும் படி ரசிகர்கள் கோரிக்கை வைத்து வந்திருந்த வேளையில் தற்போது அவரே இந்த தொடரில் இருந்து வெளியேறும் படி ஆகிவிட்டது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை