பவுண்டரி லைனில் அபாரமான கேட்ச்சை பிடித்த அக்ஸர் படேல் - வைரல் காணொளி!

Updated: Thu, Nov 14 2024 10:30 IST
Image Source: Google

தென் ஆப்பிரிக்கா - இந்தியா இடையேயான மூன்றாவது டி20 போட்டி செஞ்சூரியனில் உள்ள சூப்பர் ஸ்போர்ட் கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பந்துவீசுவதாக தேர்வு செய்ததை அடுத்து இந்திய அணி பேட்டிங் செய்தது. 

அதன்படி விளையாடிய இந்திய அணியில் திலக் வர்மா தனது முதல் சர்வதேச டி20 சதத்தைப் பதிவுசெய்து அசத்தியதுன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 107 ரன்களைச் சேர்த்தார். அவருக்கு துணையாக விளையாடிய அபிஷேக் சர்மா 50 ரன்களையும் சேர்த்தனர். இதன்மூலம் இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 219 ரன்களை குவித்தது. தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் ஆண்டில் சிமலனே 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

இதையடுத்து 220 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணியில் டாப் ஆர்டர் வீரர்கள் ரிக்கெல் ரிக்கெல்டன் 20 ரன்னும், ஹென்ரிக்ஸ் 21 ரன்னும், மார்க்ரம் 29 ரன்னும், ஸ்டப்ஸ் 12 ரன்னும், டேவிட் மில்லர் 18 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். அதேசமயம் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்கு நம்பிக்கை கொடுத்த ஹென்ரிச் கிளாசென் 41 ரன்களை எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். 

இறுப்பினும் இப்போட்டியில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய மார்கோ ஜான்சென் சிக்சர், பவுண்டரிகளாக விளாசி 16 பாந்துகளிலேயே தனது முதல் சர்வதேச அரைசதத்தைப் பதிவுசெய்த நிலையில், 54 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். இறுதியில், தென் ஆப்பிரிக்கா 7 விக்கெட் இழப்புக்கு 208 ரன்களை எடுத்தது. இதன்மூலம் இந்திய அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டி20 தொடரில் இந்தியா 2-1 என முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில் இப்போட்டியில் அக்ஸர் படேல் பவுண்டரி எல்லையில் பிடித்த அபாரமான கேட்ச் ஒன்று ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அதன்படி, இப்போட்டியின் 16ஆவது ஓவரை ஹர்திக் பாண்டியா வீசிய நிலையில், அந்த ஓவரின் 4ஆவது பந்தை எதிர்கொண்ட டேவிட் மில்லர் சிக்ஸர் விளாசி அசத்தினார். அதன்பின் அடுத்த பந்தையும் சிக்ஸர் அடிக்கும் முயற்சியில் டேவிட் மில்லர் பந்தை தூக்கி அடித்தார். 

Also Read: Funding To Save Test Cricket

அப்போது அத்திசையில் ஃபீல்டிங் செய்து கொண்டிருந்த அக்ஸர் படேல், தனது தலைக்கு மேல் சென்ற பந்தை தாவிப்பிடித்ததுடன், டேவிட் மில்லரின் விக்கெட்டையும் வீழ்த்தி அசத்தினார். இதனால் 18 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் டேவிட் மில்லர் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். இந்நிலையில் பவுண்டரில் எல்லையில் அக்ஸர் படேல் பிடித்த அபாரமான இந்த கேட்ச் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை