டெஸ்ட் தரவரிசை: புஜாரா, ஸ்ரேயாஸ், கில் முன்னேற்றம்!

Updated: Wed, Dec 21 2022 23:23 IST
Image Source: Google

இந்திய - வங்கதேச அணிகளுக்கு இடையேயான் டெஸ்ட் தொடர் விறுவிப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றியைப் பெற்றது. இந்நிலையில் ஐசிசி டெஸ்ட் வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியளை வெளியிட்டுள்ளது.

இந்த தரவரிசைப் பட்டியளில் இந்திய வீரர் புஜாரா 10 இடங்கள் முன்னேறி 16ஆவது இடம் பிடித்துள்ளார். ஸ்ரேயாஸ் ஐயர் 11 இடங்கள் முன்னேறி 26ஆவது இடம் பிடித்துள்ளார். சுப்மன் கில் 10 இடங்கள் முன்னேறி 54 ஆவது இடம் பிடித்துள்ளார்.

பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆசாம் தொடர்ந்து 2ஆவது இடத்தில் நீடிக்கிறார். ஒரு நாள் ரேங்கிங் பட்டியலில் முதலிடமும், டி20யில் 4ஆவது இடமும் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவின் ட்ரேவிஸ் ஹெட் முதல் இன்னிங்ஸில் 92 ரன்கள் அடித்து 3 இடங்கள் முன்னேறி 4ஆவது இடம் பிடித்துள்ளார். மேலும், டெஸ்ட் வரலாற்றிலேயே முதல் முறையாக 800 ரேட்டிங் பாய்ண்ட் பெற்றுள்ளார். இதற்கு முன்னதாக கடந்த ஜனவரியில் 5ஆவது இடம் பிடித்திருந்தார். 

இதே போன்று இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 23 ஆவது இடம் பிடித்துள்ளார். பாகிஸ்தான் அணிக்கு எதிராக நடந்த 3 டெஸ்ட் போட்டியிலும் சதம் அடித்த இங்கிலாந்தின் ஹாரி ப்ரூக் முதல் முறையாக 50 இடங்களுக்குள் நுழைந்துள்ளார். 

தென் ஆப்ரிக்காவின் டெம்பா பவுமா 8 இடங்கள் முன்னேறி 24 ஆவது இடம் பிடித்துள்ளார். வங்கதேச அணியின் கேப்டன் ஷகில் அல் ஹசன் 4 இடங்கள் முன்னேறி 37 ஆவது இடம் பிடித்துள்ளார்.

இதே போன்று பந்து வீச்சில் கஜிகோ ரபாடா 4 இடங்கள் முன்னேறி 3ஆவது இடம் பிடித்துள்ளார். எப்போதும் டாப்பில் இருக்கும் ரபாடா கடந்த ஆகஸ்ட் ரேங்கிங் பட்டியலில் சரிவடைந்துள்ளார். தற்போது 3ஆவது இடம் பிடித்துள்ளார். இந்திய அணியின் குல்தீப் யாதவ் 10 இடங்கள் முன்னேறி 18ஆவது இடம் பிடித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை