விராட் கோலியின் சாதனையை நெருங்கும் பாபர் ஆசாம்!

Updated: Wed, Sep 28 2022 19:11 IST
Image Source: Google

டி20 உலகக்கோப்பை தொடர் வரும் நவம்பர் மாதம் முதல் ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ளது. இந்த தொடருக்காக அனைத்து அணிகளும் தங்களது கடைசி கட்ட பயிற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

அந்தவகையில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் பாகிஸ்தான் அணி, இங்கிலாந்துடன் 7 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை நடைபெற்றுள்ள 4 டி20 போட்டிகளில் பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து தலா 2 வெற்றிகளுடன் சமநிலையில் உள்ளன. முன்னிலையை உறுதி செய்யும் 5வது டி20 போட்டி இன்று இரவு நடைபெறவுள்ளது.

இந்நிலையில் இந்த போட்டியில் தான் பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் ஆசாம் முக்கிய சாதனையை படைக்கவுள்ளார். சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக 3,000 ரன்களை கடந்த வீரர்கள் பட்டியலில் இந்திய வீரர் விராட் கோலி தான் நீண்ட நாட்களாக இருந்து வருகிறார். அவர் 81 இன்னிங்ஸ்களில் 3,000 டி20 ரன்களை கடந்தார். ஆனால் இந்த சாதனையை பாபர் அசாம் இன்று தகர்க்கலாம்.

பாபர் ஆசாம் இதுவரை 79 இன்னிங்ஸ்களில் விளையாடி 2,939 ரன்களை குவித்துள்ளார். அவர் இன்று நடைபெறும் போட்டியில் 61 ரன்களை விளாசினால் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக 3000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற பெருமையை பெறுவார்.

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இதுவரை அதிக ரன்களை அடித்தவர்கள் பட்டியலிலும் இந்தியாவின் கையே ஓங்கியுள்ளது. இந்த பட்டியலில் ரோஹித் சர்மா 131 இன்னிங்ஸ்களில் 3,694 ரன்களை அடித்துள்ளார். இவருக்கு பின்னர் விராட் கோலி 3,660 ரன்களுடன் 2ஆவது இடத்தில் இருக்கிறார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை