பாபர், ஃபகர் அதிரடியில் இமாலய இலக்கை நிர்ணயித்த பாகிஸ்தான்!

Updated: Wed, Apr 07 2021 17:22 IST
Image Source: Google

தென்ஆப்பிரிக்கா, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி செஞ்சுரியனில் இன்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. 

இதையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு தொடக்க வீரர்கள் இமாம் உல் ஹக், ஃபகர் ஸ்மான் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தது. இதில் அரைசதமடித்த இமான் உல் ஹக் 57 ரன்களில் ஆட்டமிழக்க, மறுமுனையில் அதிரடி காட்டிய ஃபகர் ஸமான் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தனது ஆறாவது சதத்தைப் பதிவுசெய்தார்.

அதன்பின் 101 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஃபகர் ஸமான் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். அதன்பின் களமிறங்கிய பாபர் அசாம் இறுதிவரை விளையாடி கடைசி பந்தில் சிக்சர் அடிக்க முயன்று, 94 ரன்களில் ஆட்டமிழந்து சதமடிக்கும் வாய்ப்பைத் தவறவிட்டார். 

இதன்மூலம் பாகிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 320 ரன்களை குவித்தது. பாகிஸ்தான் அணி தரப்பில் அதிகபட்சமாக ஃபகர் ஸமான் 101 ரன்களையும், பாபர் அசாம் 94 ரன்களையும் குவித்தனர். 

தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் கேசவ் மகாராஜ் 3 விக்கெட்டுகளையும், மார்க்ரம் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். இதையடுத்து 321 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்ஆப்பிரிக்க அணி தனது இன்னிங்ஸைத் தொடங்கவுள்ளது.
 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை