வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் ஆஃப்கானிஸ்தான் அணி 3 ஒருநாள், 2 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவருகிறது. 

Advertisement

இதில் இன்று நடைபெற்றுவரும் முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. 

Advertisement

அதன்படி களமிறங்கிய ஆஃப்கானிஸ்தான் அணியில் ரஹ்மனுல்லா குர்பாஸ், இப்ராஹிம் ஸத்ரான் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். 

அதன்பின் ஜோடி சேர்ந்த ரஹ்மத் ஷா - ஹஸ்மதுல்லா ஷாஹிதி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். பின்னர் ரஹ்மத் ஷா 34 ரன்னிலும், ஷாஹிதி 28 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

இதையடுத்து களமிறங்கிய நஜிபுல்லா ஸத்ரான் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் அடித்து அசத்தினார்.

இதனால் 49.1 ஓவர்களிலேயே ஆஃப்கானிஸ்தான் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 215 ரன்களை மட்டுமே சேர்த்தது. 

Advertisement

இதில் அதிகபட்சமாக நஜிபுல்லா ஸத்ரான் 67 ரன்களில் ஆட்டமிழந்தார். வங்கதேச அணி தரப்பில் முஷ்தபிசூர் ரஹ்மான் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News