வங்கதேசம் - ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.
ஆனால் அதன்படி களமிறங்கிய வங்கதேச அணி ஆரம்பம் முதலே அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு திரும்பினர். இதில் முஷ்பிக்கூர் ரஹிம் மட்டும் ஓரளவு விளையாடி 30 ரன்களைச் சேர்த்தார்.
இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் வங்கதேச அணி 9 விக்கெட்டுகளை இழந்து 119 ரன்களை மட்டுமே எடுத்தது. ஆஃப்கானிஸ்தான் அணி தரப்பில் ஃபசல்ஹக் பாரூக்கி, அஸ்மதுல்லா தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இதையடுத்து இலக்கை துரத்திய ஆஃப்கானிஸ்தான் அணியில் ரஹ்மனுல்லா குர்பாஸ் 3 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த ஹஸ்ரதுல்லா ஸஸாய் - உஸ்மான் கானி அதிரடியாக விளையாடி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.
இதில் ஹஸ்ரதுல்லா ஸஸாய் அரைசதம் கடந்து அசத்தினார். இதன்மூலம் 17.4 ஓவர்களில் ஆஃப்கானிஸ்தான் அணி இலக்கை எட்டி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
இந்த வெற்றியின் மூலம் ஆஃப்கானிஸ்தான் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரை 1-1 என்ற கணக்கில் சமன்செய்தது.