BAN vs AFG, 3rd ODI: ஆஃப்கானை வீழ்த்தி வங்கதேசம் ஆறுதல் வெற்றி!

Updated: Tue, Jul 11 2023 19:30 IST
BAN vs AFG, 3rd ODI: Bangladesh avoid an ODI series whitewash against Afghanistan! (Image Source: Google)

வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் ஆஃப்கானிஸ்தான் அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. இத்தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் ஆஃப்கானிஸ்தான் அணி வெற்றிபெற்று 2-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. 

இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஃப்கானிஸ்தான் அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியளிக்கும் வகையில் ரஹ்மனுல்லா குர்பாஸ் 6 ரன்களிலும், இப்ராஹிம் ஸத்ரான் ஒரு ரன்னிலும், ரஹ்மத் ஷா ரன்கள் ஏதுமின்றியும், கேப்டன் ஹஸ்மதுல்லா ஷாஹிதி 22 ரன்களிலும், முகமது நபி ஒரு ரன்னிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர்.

அதன்பின் களமிறங்கிய அஸ்மதுல்லா ஒமர்ஸாய் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்த போதிலும் 56 ரன்களுக்கு ஆட்டமிழக்க, 45.2 ஓவர்களில் ஆஃப்கான் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 126 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. வங்கதேச தரப்பில் ஷொரிஃபுல் இஸ்லாம் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

இதையடுத்து எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய வங்கதேச அணியில் தொடக்க வீரர் முகமது நைம் ரன்கள் ஏதுமின்றி ஆட்டமிழக்க, அடுத்து வந்த நஹ்முல் ஹொசைன் சாண்டோவும் 11 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த லிட்டன் தாஸ் - ஷாகிப் அல் ஹசன் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 

அதன்பின் 39 ரன்களை எடுத்திருந்த ஷாகிப் அல் ஹசன் ஆட்டமிழக்க, மறுபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் லிட்டன் தாஸ் அரைசதம் கடந்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் வங்கதேச அணி 23.3 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆஃப்கானிஸ்தானை வீழ்த்தி ஆறுதல் வெற்றியைப் பதிவுசெய்தது  

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை