BAN vs AFG, Only Test: மீண்டும் சொதப்பிய ஆஃப்கான் பேட்டர்கள்; வெற்றியை நோக்கி வங்கதேசம்!

Updated: Fri, Jun 16 2023 19:53 IST
BAN vs AFG, Only Test: Bangladesh close in on big victory against Afghanistan in one-off Test! (Image Source: Google)

ஆஃப்கானிஸ்தான் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து, ஒரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளையாடுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்தப் போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணிக்காக வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் விளையாடும் நட்சத்திர வீரர்கள் யாரும் பெரிதாக இடம்பெறவில்லை.

ஆப்கானிஸ்தானின் பந்துவீச்சை வஙக்தேசஅணியின் துவக்க ஆட்டக்காரர் முகமதுல் ஹசன் ஜாய் நிதானமாக எதிர்கொண்டு 76 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். ஆனால் இன்னொரு முனையில் நின்று அதிரடி காட்டிய நஜ்முல் ஹுசைன்  175 பந்துகளில் 23 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் உடன் 146 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இதமூலம் வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் 382 ரன்கள் சேர்த்தது. ஆஃப்கானிஸ்தான் அணியின் நிஜாத் மசூத் ஐந்து விக்கட்டுகள் கைப்பற்றி அசத்தினார்.

இதையடுத்து தனது முதல் இன்னிங்ஸ் விளையாடிய ஆஃப்கானிஸ்தான் அணி 146 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. வங்கதேச அணியின் இபாதத் ஹுசைன் நான்கு விக்கெட்டுகள் வீழ்த்தினார். தொடர்ந்து ஆஃப்கானிஸ்தான் அணிக்கு ஃபாலோ ஆன் தராமல் தனது இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய வங்கதேசம் அணிக்கு இந்த முறையும் சதம் அடித்து நஜ்முல் ஹுசைன் அசத்தினார்.

இவர் 151 பந்துகளில் 15 பவுண்டரிகள் உடன் 124 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அதேசமயம் நான்காவது விக்கெட்டுக்கு களமிறங்குய மொமினுல் ஹக்கும் சதம் விளாச அணியின் ஸ்கோரு மளமளவென உயர்ந்தது. இதன்மூலம் வங்கதேச அணி இரண்டாவது இன்னிங்ஸில் 4 விக்கெட் இழப்பிற்கு 425 ரன்களை எடுத்த நிலையில் டிக்ளர் செய்வதாக அறிவித்தது.

இதன்மூலம் வங்கதேச அணி 661 ரன்களை ஆஃப்கானிஸ்தான் அணிக்கு இழக்காக நிர்ணயித்தது. இதையடுத்து களமிறங்கிய ஆஃப்கானிஸ்தான் அணியில் இந்த இன்னிங்ஸிலும் எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை. அந்த அணியின் தொடக்க வீரர்கள் இப்ராஹிம் ஸத்ரான் ரன்கள் ஏதுமின்றி ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து அப்துல் மாலிக்கும் 5 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனார். 

அதன்பின் களமிறங்கிய கேப்டன் ஹஸ்மதுல்லா ஷாஹிதி 13 ரன்க்ளைச் சேர்த்த நிலையில் காயம் காரணமாக ரிட்டையர்ட் ஹர்ட் முறையில் பெவிலியனுக்கு திரும்பினார். இதன் காரணமாக ஆஃப்கானிஸ்தான் அணி மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 45 ரன்களை மட்டுமே எடுத்தது. நாளை நடைபெறவுள்ள நான்காம் நாள் ஆட்டத்தில் ஆஃப்கானிஸ்தான் அணி 8 விக்கெட் கையிருப்பு இருக்கும் நிலையில் 617 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடவுள்ளது.  

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை