வங்கதேசம் - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி இன்று நடைபெற்றது.
இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து விளையாடியது. அதன்படி களமிறங்கிய அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 121 ரன்களை மட்டுமே எடுத்தது. இதில் அதிகபட்சமாக மிட்செல் மார்ஷ் 45 ரன்களைச் சேர்த்தார்.
இதையடுத்து எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய வங்கதேச அணியில் சௌமியா சர்கார் ரன் ஏதுமின்றியும், முகமது நைம் 9 ரன்களிலும் ஆட்டமிழந்தார்.
அதன்பின் ஜோடி சேர்ந்த ஷகிப் அல் ஹசன் - மெஹிதி ஹசன் ஆகியோர் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பின் ஷகில் அல் ஹசன் 26 ரன்களில் ஆட்டமிழக்க, மெஹிதி ஹசன் 23 ரன்களில் வெளியேறினார்.
பின்னர் களமிறங்கிய அஃபிஃப் ஹொசைன் அதிரடியாக விளையடி அணியை வெற்றிக்கு அழைத்து சென்றார். இதன் மூலம் 18.4 ஓவர்களிலேயே வங்கதேச அணி இலக்கை எட்டி, 5 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது.
இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட வங்கதேச அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது. இப்போட்டியில் சிறப்பாக விளையாடிய அஃபிஃப் ஹொசைன் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.