BAN vs AUS: ஸ்வெப்சன் பந்துவீச்சில் தடுமாறிய வங்கதேசம்!
வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து வரும் ஆஸ்திரேலிய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஏற்கெனவே நடைபெற்ற 3 போட்டிகளிலும் வங்கதேச அணி வெற்றி பெற்று, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக முதல் முறையாக டி20 தொடரைக் கைப்பற்றியது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான 4ஆவது டி20 போட்டி இன்று தாக்காவில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய வங்கதேச அணியில் முகமது நைம் 28 ரன்கள், சௌமியா சர்கார் 8 ரன்கள், ஷகிப் அல் ஹசன் 15 ரன்கள், மஹ்மதுல்லா, நுருல் ஹசன் ஆகியோர் ரன் ஏதுமின்றியும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தன.
இதனால் 70 ரன்களுக்குள்ளாகவே அந்த அணி 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அடுத்து வந்த வீரர்களும் ஆஸ்திரேலிய அணியின் அபாரமான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் வந்த வேகாத்திலேயே நடையைக் கட்டினர்.
இதனால் 20 ஓவர்கள் முடிவில் வங்கதேச அணி 9 விக்கெட் இழப்பிற்கு 104 ரன்களைச் சேர்த்தது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் மிட்செல் ஸ்வெப்சன் 3 விக்கெட்டுகளையும், ஜோஷ் ஹசில்வுட் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.