BAN vs AUS : மீண்டும் குறைவான இலக்கை நிர்ணயித்த வங்கதேசம்; வெற்றி பெறுமா ஆஸி.,?
வங்கதேசம் - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான கடைசி மற்றும் ஐந்தாவது டி20 போட்டி தாக்காவில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய வங்கதேச தொடக்க வீரர்கள் மெஹிதி ஹாசன் 13 ரன்களிலும், முகமது நைம் 23 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். பின்னர் களமிறங்கிய ஷகிப் அல் ஹசன், சௌமியா சர்கார், மஹ்மதுல்லாவும் சொற்ப ரன்களில் வெளியேற வங்கதேச அணி தடுமாறியது.
பின்னர் வந்த வீரர்களும் ஸாம்பா, கிறிஸ்டியன் ஆகியோரது பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறினர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் வங்கதேச அணியால் 8 விக்கெட் இழப்பிற்கு 122 ரன்களை மட்டுமே சேர்க்க முடிந்தது.
ஆஸ்திரேலிய அணி தரப்பில் நாதன் எல்லீஸ், டேனியல் கிறிஸ்டியன் தலா இரண்டு விக்கெட்டுகளையும், ஆஷ்டன் டர்னர், ஆஷ்டன் அகர், ஆடம் ஸாம்பா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.