BAN vs AUS : நாதன் ஹாட்ரிக்கில் கவிழ்ந்த வங்கதேசம்!
வங்கதேசம் - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங்செய்ய தீர்மானித்து விளையாடியது.
அதன்படி களமிறங்கிய வங்கதேச அணியில் தொடக்க வீரர்கள் முகமது நைம், சௌமியா சர்கார் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.
பின்னர் ஜோடி சேர்ந்த ஷாகிப் அல் ஹசன் - மஹ்மதுல்லா இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தியது. பின் 26 ரன்களில் ஷகிப் அல் ஹசன் ஆட்டமிழந்தார்.
அவரைத்தொடர்ந்து வந்த வீரர்களும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேற, மறுமுனையிலிருந்த மஹ்மதுல்லா அரைசதம் கடந்து அசத்தினார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் வங்கதேச அணி 9 விக்கெட்டுகளை இழந்து 127 ரன்களைச் சேர்த்தது.
இதில் அதிகபட்சமாக கேப்டன் மஹ்மதுல்லா ரன்களைச் 52 சேர்த்தார். ஆஸ்திரேலிய அணி தரப்பில் நாதன் எல்லீஸ் 3 விக்கெட்டுகளையும், ஹசில்வுட், ஆடம் ஸாம்பா, தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.