BAN vs ENG, 1st ODI: வங்கதேசத்தை 209 ரன்களில் சுருட்டியது இங்கிலாந்து!

Updated: Wed, Mar 01 2023 15:21 IST
Image Source: Google

வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடுகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் இன்று தொடங்குகிறது. 

அதன்படி தாக்காவில் இன்று நடைபெற்று வரும் முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்றுள்ள வங்கதேச அணி கேப்டன் தமிம் இக்பால் முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தர். அதன்படி களமிறங்கிய வங்கதேச அணியில் லிட்டன் தாஸ் 7 ரன்களில் ஆட்டமிழக்க, கேப்டன் தமிம் இக்பாலும் 23 ரன்களுக்கு தனது விக்கெட்டை இழந்தார். 

பின்னர் வந்த நஜ்முல் ஹொசைன் சிறப்பன ஆட்டத்தை வெளிப்படுத்த மறுமுனையில் வந்த முஷ்பிக்கூர் ரஹிம் 17, ஷாகிப் அல் ஹசன் 8 என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தார். இருப்பினும் மறுமுனையில் நஜ்முல் ஹொசைன் தனது முதல் அரைசதத்தைப் பதிவுசெய்த கையோடு 58 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். 

பின்னர் வந்த மஹ்மதுல்லா 31 ரன்களில் ஆட்டமிழக்க, அஃபிஃப் ஹுசைன், மெஹிதி ஹசன், டஸ்கின் அஹ்மத் என அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். இதனால் வங்கதேச அணி 47.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 209 ரன்களை மட்டுமே எடுத்தது. இங்கிலாந்து தரப்பில் ஜோஃப்ரா ஆர்ச்சர், மார்க் வுட், மொயீன் அலி, ஆதில் ரஷித் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை