வங்கதேசம் - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று தாக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்யத் தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய வங்கதேச அணியின் தொடக்க வீரர்கள் லிட்டன் தாஸ் - முகமது நைம் இணை சிறப்பான அடித்தளத்தை அமைத்து தந்தது.
பின் 33 ரன்களில் லிட்டன் தாஸ் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து 39 ரன்களில் முகமது நைமும் வெளியேறியானர். அடுத்து வந்த முஷ்பிக்கூர் ரஹீம், ஷகிப் அல் ஹசன், அஃபிஃப் ஹொசைன் ஆகியோரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
இதையடுத்து பொருப்பை உணர்ந்து விளையாடிய கேப்டன் மஹ்மதுல்லா சில பவுண்டரிகளை விளாசி அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.
இதன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் வங்கதேச அணி 6 விக்கெட்டுகளை இழந்து 141 ரன்களைச் சேர்த்தது. இதில் மஹ்மதுல்லா 37 ரன்களைச் சேர்த்தார். நியூசிலாந்து அணி தரப்பில் ரச்சின் ரவீந்திரா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.